கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 41

வானிலே பறக்கும் தாள் வானஊர்தி

காற்றில் அழகாகப் பறந்து செல்லும் தாள் வானஊர்தி உருவாக்குவது எப்படி எனக் காணலாம்.

இலேசான 8 1/2 க்கு 11 அங்குல அளவுள்ள தாளை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளவாறு தாளை இரண்டாக மடிக்கவும். பிறகு ஒரு பகுதியில் 1 அங்குல அளவுக்கு மடிக்கவும். அடுத்த பகுதியில் படம் d யில் உள்ளவாறு வளைகோடு வரைந்து கத்தரியால் வெட்டி எடுத்துவிடவும். பிறகு படத்தில் காட்டியுள்ளவாறு காகித வான ஊர்தியின் முன் பகுதி இறக்கையின் ஓரத்தை மேல் நோக்கி மடித்தும், வான ஊர்தியின் பின் பகுதி இறக்கையின் ஓரத்தை கீழ்நோக்கி மடித்தும் - காற்றின் மீது தவழ்ந்து செல்வதற்கு ஏற்றவாறு மடித்து விடவும். பிறகு இதனைப் பறக்க விடவும். காற்றில் தவழ்ந்து தவழ்ந்து செல்வது பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.




www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278