கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 40

விலங்குத் தலைகளின் நிழல் உருவங்கள்

இரண்டு கை விரல்களையும் படத்தில் காட்டியுள்ளவாறு மடக்கிப் பிடிக்கவும். கைவிரல்களின் ஒரு பக்கத்தில் மெழுகுவர்த்தி அல்லது விளக்கினைப் பிடிக்கவும். மறுபகுதியில் ( வெள்ளைத்தாள் அல்லது சுவற்றில் ) கையின் நிழல் படுமாறு நகர்த்தி சரிசெய்து கொள்ளவும். கைவிரல்களின் நிழல் சுவற்றில் தெரியும். படத்தில் உள்ளவாறு கைவிரல்களை மடக்கிப் பிடிக்கும் பொழுது - கலைமான், வேட்டைநாய், ஒட்டகம், முயல், ஆடு, கரடி, நாய், ஓநாய், யாணை போன்ற விலங்குகளின் தலைப்பகுதி நிழலாகத் தெரியும். மாணவர்கள் ஈர்ப்புடன் செய்து மகிழ்வார்கள்.




www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278