கல்வி ஆராய்ச்சிகள்
வரிசை எண் : 37
களிமண்ணால் உருவங்கள் செய்வோம்
களிமண் எளிதில் கிடைக்கும். கிடைக்காத இடங்களில் மாற்றாக பிளாஸ்டோசீன் என்ற
பொருளையும் பயன்படுத்தலாம். (இரும்புக் கடைகளில் கிடைக்கும்)
சிறு கற்களில்லாத களிமண்னைத் தண்ணீர் தெளித்துப் பிசைந்து (கெட்டியாக இருக்க வேண்டும்) வைத்துக்
கொள்ளவும். களிமண்ணால் உருண்டை, உருளைகளைச் செய்து அவற்றை ஒட்டவைத்து, கீழ்க்காணும்
உருவங்களை ஆக்கலாம். கூர்மையான கத்தியைப் பயன்படுத்தினால் உருவத்தின் முனைகள் அழகாக அமையும்.
தண்ணீரை விரலில் தொட்டுக் கொண்டு உருவங்களின் மேல் தடவ உருவங்கள்
பளபளவென மினுக்கும். நிழலில் உலரவைத்து, சுட்டு எடுத்து, வண்ணம் தடவி நீண்ட நாளுக்குப்
பயன்படுத்தலாம்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
|