கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 36

க, ச, த, ப - ஒற்று மிகும் - மிகாத இடங்கள்


பொதுவாகவே தமிழில் தொடர்களை எழுதும் பொழுது, எங்கு ஒற்று போடுவது, எங்கு ஒற்று போடக்கூடாது என்பதில் அனைவரும் ஐயப்பாட்டுடனேயே உள்ளனர். ஒற்று போடவும் செய்யலாம், போடமலும் இருக்கலாம் என்று நழுவியவர்களே அதிகம். தெளிவாக இதுதான் எனத் திட்டமிட்டுக்கூற ஏன் இயலவில்லை என்ற வினாவின் விடையாகவே இந்தப் பட்டியல்.


க, ச, த, ப - ஒற்று



மிகும் இடங்கள்

1) இரண்டாம் வேற்றுமை உருபு ஐ
திரைப்படத்தைக் காண

2) நான்காம் வேற்றுமை உருபு கு
இரப்பவர்க்குக் கொடு

3) சுட்டெழுத்து அ,இ,உ
அந்த, இந்த, உந்த, அப்படி, இப்படி
அந்தக் கட்டுரை

4)அகர ஈற்று வினையெச்சம் (க்+ அ = க)
போகச் சொன்னேன்

5) அ, இ, ஊ ஈற்று வினையெச்சம்
சுடப் போனான்
ஓடிப் போனான்
கூடிப் போனான்

6) வன்தொடர்க் குற்றியலுகரம்
வாக்குச் சாவடி

7) ஒரு எழுத்துச் சொல் , ஒரு மொழி
பூப் பூத்தது

8) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
செல்லா(த)க் காசு

9) இருபெயரொட்டுப் பண்புத் தொகை
சாரைப் பாம்பு

10) முற்றியலுகரச் சொற்கள்
திருக் குறள்

11) பைய, மெல்ல, தனி, இனி, கடி - மிகும்


க, ச, த, ப - ஒற்று



மிகாத இடங்கள்

1) அகர ஈற்றுப் பெயரெச்சம்
தின்றன காளைகள்

2) வினைமுற்று தொடர்
வாழ்க திலகர்

3) எட்டாம் வேற்றுமை, விளிவேற்றுமை
அம்மா கொடு

4) று, து, டு, - ஈற்றெழுத்து எனின் மிகாது
சென்று கண்டான்
(வந்து, கண்டு)

5) ஆ, ஏ, ஓ, யா - வினா முன் மிகாது
ராமனா செய்தான்

6) சுட்டுவினா மிகாது (அப்படி, இப்படி, எப்படி தவிர)
கண்டபடி பேசினான்,
சொன்னபடி செய்தான்

7) ஐ மறைந்தால் மிகாது, ஐ தெரிந்தால் மிகும்
பணம் திருடினான்
பணத்தைத் திருடினான்

8) வினைத்தொகை மிகாது
சுட்டகாடு,
சுடுகின்றகாடு,
சுடும்காடு,
சுடுகாடு

9) உம்மைத் தொகை மிகாது
இரவு பகல் - இரவும் பகலும்

10) அன்னம் போன்ற நடையை உடைய பெண் மறைந்துள்ளது - மிகாது
அன்னநடை போந்தாள்



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278