கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 31

வண்ண நூலில் படங்கள் வரைந்திட

கெட்டியான அட்டையை எடுத்துக் கொண்டு அதில் மாணவர்கள் விரும்புகிற படங்களைக் கோட்டோவியமாக வரையச் சொல்லவும். கோட்டோவியத்தின் மேல் ஒரு மி.மீ இடைவெளி இருக்குமாறு தொடர்ச்சியாகத் துளைகளை ஊசியால் போடச்சொல்லவும்.

வண்ண உல்லன் நூல் அல்லது தடிமனான நூலை ஊசியில் கோர்த்து, அட்டையின் கீழிருந்து துளைவழியாக ஊசியைக் கோர்த்து எடுக்கச் செய்யவும். பிறகு அடுத்த துளையின் வழியாக மேலிருந்து கீழே ஊசியைக் கோர்த்து எடுக்கவும். பிறகு கீழிருந்து மேலே கோர்க்க வேண்டும். நூல் தொடர்ச்சியாக இருக்கும் வகையில் நூலைக் கோர்த்து எடுக்கவும்.

வெவ்வேறு வண்ண நூலைப் பயன்படுத்தி, நூல் ஓவியத்தை மிகுந்த அழகுடையதாக ஆக்கலாம்.

கற்பனைத் திறனும், பொறுமையும், விடாமுயற்சியும் உள்ள மாணவர்களால் அழகிய, ஈர்ப்புடைய ஓவியத்தை வரைய இயலும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278