கல்வி ஆராய்ச்சிகள்
வரிசை எண் : 27
தாளை மடக்கி, வெட்டி வடிவங்கள் ஆக்குதல்.
சதுர வடிவத் தாளை எடுத்துக் கொண்டு முதலில் இரண்டாக, பிறகு நான்காக மடிக்கவும்.
நான்கு சதுரங்கள் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கிக் கிடைக்கும். பிறகு முக்கோண வடிவம் வருமாறு குறுக்கே
மடிக்கவும். இப்பொழுது தாள் 8 பகுதிகளாக மடிக்கப்பட்டிருக்கும்.
படத்தில் காட்டியுள்ளவாறு கோடு போட்டிருக்கும் பகுதியை வெட்டி எடுத்து விடவும். பிறகு மடித்த தாளைப்
பிரிக்கவும். தாள் அருகில் உள்ளது போல அழகாக வெட்டப் பட்டிருக்கும்.
மாணவர்கள் தாளை அவர்களது விருப்பம்போல கத்தரிக்கோலால் வெட்ட வெவ்வேறு வகையான வடிவங்கள்
கிடைக்கும். வண்ணத்தாளில் வெட்டி ஒட்ட, பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெட்டுகிற மாணவர்களுக்கு
கலை நயமும், கற்பனைத்திறனும், பொறுப்புணர்வும் தன்நம்பிக்கையும் மிகும்
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
|