கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 24

உருவங்கள் ஆக்கி மகிழ்ந்திட


சணல், தேங்காய் மட்டை மஞ்சி, வாழை மட்டை நார், உல்லன் - போன்ற ஏதாவது ஒன்றினை எடுத்துக் கொள்ளவும்.

அதனைப் படத்தில் காட்டியுள்ளவாறு பொம்மைகளாகவோ, குண்டூசி குத்தும் மெத்தைகளாகவோ, குருவி முட்டைகள் வைத்துள்ள கூடுகள்போலவோ, சிறிய துடைப்பான்களாகவோ - செய்ய ஊக்குவிக்கலாம்.

பொம்மைகள் செய்யப் படத்தில் காட்டியுள்ளவாறு நார்த்தொகுப்பை மடித்துத் தலைப்பகுதியை உருவாக்கிக் கொண்டு, கழுத்து உடல் பகுதிளை நூலால் கட்டி, கை கால் உடல் பகுதியையும் நூலால் கட்டி, ஊசியால் வண்ண நூலினைக் கோர்த்து, கண் மூக்கு வாய் அமைத்து - உருவங்களை - மாணவர்கள் நடுவில் அமர்ந்து உருவாக்கிக் காட்ட அவர்களும் அதுபோலச் செய்யத் தொடங்குவார்கள். இது அவர்களது கைவேலைத் திறனை அதிகப்படுத்துவதோடு, நுட்பமாக, கூர்மையாக ஒரு செயலில் ஈடுபடுகிற தன்மையும் உருவாக்கும்.

படத்தில் காட்டியுள்ளதுபோல மட்டுமல்லாமல் அவர்கள் விரும்புகிற உருவங்களைக் கற்பனையாக ஆக்குவதற்கும் ஊக்குவித்தால், அவர்களது செயற்பாடு வியப்பூட்டுவதாக அமையும். புதியன செய்கிற ஆற்றலும் அவர்களுக்குக் கைகூடும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278