கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 21

களிமண்ணால் உருவங்கள் செய்வோம்

களிமண் எளிதில் கிடைக்கக்கூடியது. மாணவர்கள் தாங்களாகவே தண்ணீர் ஊற்றிப் பிசைந்து உருவங்கள் ஆக்கி மகிழ்வார்கள். செய்முறையைப் பயிற்றுவித்தாலே போதும். எளிதில் கிடைக்கிற மண்ணைக்கொண்டு செய்து மகிழ்வார்கள்.

தற்பொழுது பிளாஸ்டோசீன் என்ற பொருள் இரும்புக் கடைகளில் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இதை வைத்துக்கூட உருவங்களை ஆக்கி மகிழலாம்.

கற்பனைத்திறனும், செய்யும் ஆற்றலும் இயல்பாகவே மாணவர்களுக்கு உண்டு. ஆட்டாங்கல், உரல், அம்மி, வண்டி போன்றவற்றை மாணவர்கள் செய்து விளையாடி மகிழ்வார்கள்.

எடுத்துக்காட்டாக இங்கு உருண்டை, குச்சி போன்ற இரண்டு வடிவங்களைப் பயன்படுத்தி உருவாக்குகிற ஒரு வடிவம் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்பனைத் திறனுக்கு ஏற்றவாறு பல்வேறு வடிவங்களைச் செய்து மகிழ ஊக்குவிக்கவும்.

இலை, பூ, காய், வடிவங்கள், விலங்குகள், பறவைகள், மனித உருவங்கள் எனப் பல்வேறு வடிவங்களை ஆக்க ஊக்குவிப்பது மாணவர்களின் கற்பனைத் திறனை வளர்த்தெடுப்பதாக அமையும்.

களிமண்ணால் செய்கிற உருவங்களில் வெடிப்பு விழாமல் இருக்கக் களிமண்ணுடன் பஞ்சு சேர்த்துப் பிசைந்து பயன்படுத்தலாம். களிமண் உருவங்களைச் சூளையில் வைத்துச் சுட்டு வண்ணம் தீட்டி நிரந்தரமாகவும் பயன்படுத்தலாம்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278