கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 20

ஒளிந்துள்ள படங்கள் என்ன என்று கண்டுபிடி ?

மழலையர்களுக்குத் தேடிக் கண்டுபிடித்தல் என்பது மகிழ்வாக இருக்கும். தங்களுக்கு விருப்பமான அல்லது அறிமுகமான விலங்குகள், பறவைகள், விளையாட்டுப் பொருள்கள் - போன்றவற்றைத் காணும் பொழுது அவர்களது மகிழ்வு கூடும்.

கொடுக்கப்பட்டுள்ள தாளில் வரைந்துள்ள ஓவியத்தில் இவ்வாறு படங்களைக் கண்டுபிடிக்கச் சொன்னால் ஈடுபாட்டுடன் தேடுவார்கள். தேடிக் கண்டுபிடிக்கும் பொழுது அவர்கள் அடையும் மகிழ்விற்கு எல்லையே இல்லை.

கண்டுபிடிப்பதோடு, அவற்றிற்கான வண்ணங்களை தீட்டி அவைகளை அழகுபடுத்துங்கள் என்று ஊக்கப்படுத்தினால் - சிறப்பாகச் செய்வார்கள் - ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான வண்ணங்களில் அந்த விலங்கைக் கண்டு மகிழ்வார்கள் - ஒரு முறை குரங்கிற்குப் பச்சை வண்ணம் தீட்டி ஒரு குழந்தை மகிழ - அடுத்த குழந்தை - பச்சை வண்ணக் குரங்கு இல்லையே என்று கேலி பேச - என் குரங்கு இலையை மட்டுமே சாப்பிடக் கூடியது அதனால்தான் பச்சையாக இருக்கிறது என்று கூற - அவர்களது கற்பனை வளம் மேலோங்குவது கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களைத் தொடக்க நிலையில் இந்த வண்ணம் தான் அடிக்க வேண்டும் என்று நெருக்குதல் கூடாது. இயல்பாக அவர்கள் விரும்புகிற வண்ணங்களை - அடிக்கவும் - கலந்துரையாடவும் அனுமதிக்க வேண்டும்.



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278