கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 17

செவ்வகக் கட்டைகளை அடுக்குதல்

செவ்வகக் கட்டைகளைக் கீழ்க்காணும் படத்தில் காட்டியுள்ளவாறு மழலைகள் அடுக்கிப் பழகும்பொழுது, அவர்களது கற்பனைத்திறனும், கைவேலைத் திறனும், நுணுக்கமும் வளர்க்கப்படும். எந்தச் செயலையும் சிறப்பாக, ஒழுங்காக, அழகாகச் செய்யவேண்டும் என்கிற நுட்பம் பதியும்.

படத்திலுள்ள பொருள்கள் மட்டுமல்லாது காணுகிற பொருள்களையும் இவ்வாறு கட்டைகளை அடுக்கி உருவாக்கவேண்டும் என்கிற துடிப்பு எழுந்தால் அந்த மழலை எதிர்காலத்தில் ஒரு மிகச் சிறந்த கட்டட நுணுக்கவியலாளராக வருவார் என்பது உறுதி.

கட்டைகளை அடுக்குதல் என்பது இயல்பானதாக, நெருக்குதலில்லாததாக, மாதம் ஒருமுறை பயிற்சி தருவதாக அமைந்தால் சிறப்பாக இருக்கும்.

(கட்டைகள் மரக்கட்டைகளாகவோ, வண்ண வண்ண ஞெகிழிக் கட்டைகளாகவோ இருக்கலாம். மரக்கட்டைகள் 8 செ.மீ நீளமும் 4 செ.மீ. அகலமும் இருக்கலாம். கட்டைகள் வண்ணங்கள் பூசியிருந்தால் மாணவர்கள் மகிழ்வாக எடுத்து அடுக்குவார்கள்)

( இது போலவே சதுரக் கட்டைகளையும், முக்கோணக் கட்டைகளையும் பயன்படுத்தி வடிவங்கள் ஆக்கி மகிழ ஊக்குவிக்கலாம் )



www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278