கல்வி ஆராய்ச்சிகள்
வரிசை எண் : 14
நூல் ஓவியம் ஆக்கலாமா ?
சமபக்க முக்கோணத்தை ஒரு கெட்டியான அட்டையில் வரைந்து கொள்ளவும்.
முக்கோணத்தின் பக்கங்களில் சம அளவுள்ள புள்ளிகளைக் குறித்துக் கொள்ளவும்.
படத்தில் அ - ஐ என ஒரு பக்கத்தில் 9 புள்ளிகளும், அ1 - ஐ1 என இரண்டாவது பக்கத்தில் 9 புள்ளிகளும்,
அ2 - ஐ 2 என மூன்றாவது பக்கத்தில் 9 புள்ளிகளும் குறிக்கப்பட்டுள்ளன.
வண்ண நூலை ஊசியில் கோர்த்து
முதலாவதாக ---- அ - அ1 , ஆ - ஆ1, இ - இ1,
ஈ - ஈ1, உ - உ1, ஊ - ஊ1, எ - எ1, ஐ - ஐ1 எனப்
18 துளைகளின் வழியாக நூலைக் கோர்த்து எடுக்கவும்
( படம் 1 பார்க்க)
இரண்டாவதாக ---- அ1 - அ2 , ஆ1 - ஆ2, இ1 - இ2,
ஈ1 - ஈ2, உ1 - உ2, ஊ1 - ஊ2, எ1- எ2, ஐ1 - ஐ2 எனப்
18 துளைகளின் வழியாக நூலைக் கோர்த்து எடுக்கவும்
( படம் 2 பார்க்க)
இறுதியாக ----- அ2 - அ , ஆ2 - ஆ, இ2 - இ,
ஈ2 - ஈ, உ2 - உ, ஊ2 - ஊ, எ2- எ, ஐ2 - ஐ எனப்
18 துளைகளின் வழியாக நூலைக் கோர்த்து எடுக்கவும்
( படம் 3 பார்க்க)
இப்பொழுது படத்தில் காட்டியுள்ளவாறு அழகிய நூல் ஓவியம் கிடைக்கும். அட்டையில் நூல் கோர்க்கும் புள்ளிகளை நெருக்கமாக வைத்தால்
ஓவியம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278
|