கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 11

இலைகளை ஒட்டி உருவங்களாக்குதல்.

கீழேயுள்ள படத்தில் இலைகளை ஒட்டி உருவாக்கியுள்ள பூனைக்குட்டியைப் பார்க்கிறீர்கள். இதுபோல மாடு, கிளி, ஆந்தை, யானை. போன்ற, பல உருவங்களையும் உருவாக்கலாம். ( இலைகளைச் சேகரித்து ஒட்டுங்கள் என்றதும், ஈடுபாடு மிகுதியால், நாம் வளர்த்திருக்கும் செடிகொடிகளில் உள்ள அனைத்து இலைகளையும் பறித்து விடுவார்கள். எனவே முளைத்து உள்ள களைச் செடிகளினுடைய இலைகளை மட்டும் பறிக்கச் சொல்லுங்கள். இதன் முலம் வேண்டாத செடிகளைப் பள்ளி வளாகத்திலிருந்து அகற்றவும் செய்யலாம் )

சுற்றுப்புறத்தில் உள்ள களைச் செடிகளின் இலைகளைச் சேகரித்து, தலை, கை, கால், உடம்பு என உருவங்களைக் கற்பனை செய்து அதற்கேற்றவாறு இலைகளை ஒட்டி வெவ்வேறு வகையான விலங்குகள், இயற்கைக் காட்சிகளின் உருவங்களை வளர்ந்த மாணவர்களை உருவாக்கச் சொல்லி ஊக்குவிக்கலாம்.

இச் செயற்பாட்டினால் மாணவர்களுக்குக் கற்பனை ஆற்றலும், கலைத் திறனும், படங்களை வரைந்து உருவாக்க இயலும் என்கிற தன்னம்பிக்கையும் வளரும்.




www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278