கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 08

உருளும் சதுரங்கள் செய்ய.

கெட்டியான வரைபடத்தாளை எடுத்துக் கொண்டு, படம் 1 இல் உள்ளது போல வரைந்து, மடக்கி, ஒட்டி, கனசதுரப் பெட்டிகளை உருவாக்கிக் கொள்ளவும்.

எட்டு பெட்டிகளை ஆக்கிக் கொண்டு நான்கு நான்காக இரண்டு வரிசையில் அடுக்கி படம் 2 போல பசைத்தாளை மேலே ஒட்டவும். பிறகு படம் 3 போல பக்கவாட்டில் ஒட்டவும். பிறகு படம் 4 போல அடிப்பக்கத்தை மேலே திருப்பி ஒட்டவும். ஒவ்வொரு ஒட்டுதலுக்கும் பின்புறத்திலும் ஒட்டி விடவும்.

முதலில் (படம் 2) ஒட்டியதை 4 பெட்டிகளாகப் பிரியுமாறு நடுவில் கிழித்துவிடவும்.இப்பொழுது 8 கனசதுரங்களும் தொடர்ச்சியாக உளுரும். மாணவர்கள் மிகுந்த மகிழ்வு அடைவார்கள்.

ஒவ்வொரு பெட்டிக்கும் நான்கு பக்கங்கள் என எட்டு பெட்டிகளுக்கு 32 பக்கங்கள் உள்ளதால் 32 பக்கங்களிலும் படங்களை, எண்களை ஒட்டி உருட்டிக் காட்டி மாணவர்களின் கற்றலுக்குத் தரமான அடித்தளமிடலாம்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278