கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 07

உருளும் அறுகோணம் செய்ய

20 x 10 செ.மீ அளவுள்ள கெட்டியான தாளை எடுத்துக்கொண்டு, முதலில் நீளவசத்தில் இரண்டாக, பிறகு நான்காக மடிக்கவும். இப்பொழுது படத்தில் காட்டியுள்ளவாறு கெட்டியான தாள் நீளவசத்தில் நான்கு சமபாகங்களாக மடிக்கப்பட்டிருக்கும். (படம்1).

இப்பொழுது 1 ஆவது பாகத்தை 2 ஆவது பகுதியின் மேல் இருக்குமாறும், 4 ஆவது பாகத்தை 3 ஆவது பகுதியின் மேல் இருக்குமாறும் மடிக்கவும். பிறகு இதனை இரண்டாக, நான்காக, எட்டாக அகல வசத்தில் மடிக்கவும். மடித்ததைப் பிரிக்கவும். இப்பொழுது படம் இரண்டில் காட்டியுள்ளவாறு இருக்கும். (படம்2)

பிறகு படம்3 ல் காட்டியுள்ளது போல புள்ளிக் கோடுகள் வரையவும். புள்ளிக் கோடுகளின் மேல் மடக்கவும். (படம்3)

பிறகு 8 பகுதியில் 1 பகுதியை வெட்டி எடுத்துவிட்டு, 7 வது பகுதியை 6 வது பகுதிக்குள் நுழைக்கவும். (படம்4). இப்பொழுது படத்தில் காட்டியுள்ளவாறு மடக்கப்பட்ட கெட்டியான தாள் வளைய வடிவத்தில் இருக்கும்.

வளைய வடிவத்தின் மேல் பகுதியில் உள்ள முக்கோண மடிப்பை ஒன்று விட்டு ஒன்று உள்ளே மடக்கவும். கோட்டின் மீதே மடக்கவும். கீழ்பகுதியிலும் இவ்வாறே மடக்கவும். இப்பொழுது படம் 5ல் உள்ளதுபோலக் கிடைக்கும். மெதுவாக நடுப்பகுதியை உள்ளே அழுத்தினால் நடுப்பகுதி உள்ளே செல்லும். பக்கவாட்டுப் பகுதி மேலே வரும். முதலில் மெதுவாகச் செய்யவும். ஒரு சுற்று வந்து விட்டால் பிறகு எளிமையாக அதுவாகவே சுழலும். மெதுவாக அழுத்தினால் போதும். - உருளும்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278