கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 03

கற்பனைத்திறன் வளர

படத்தில் காட்டியுள்ளவாறு ஒரு சதுர அட்டையை எடுத்துக் கொண்டு, படத்தில் உள்ளது போல கோடுகளைச் சரியாக வரைந்து கொண்டு, வெட்டினால் 7 துண்டுகள் கிடைக்கும்.

இந்த ஏழு துண்டுகளையும் மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பொருத்தி மகிழ ஊக்குவிக்க வேண்டும்.

படத்தில் பல்வேறு வகையான வடிவங்களின் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த வடிவங்களைப் பார்த்து பொருத்திப் பார்க்கவும் செய்யலாம். ஒவ்வொரு வடிவத்தையும் அவர்களிடமுள்ள அந்த ஏழு அட்டைகளைக் கொண்டு உருவாக்கும் பொழுது, கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது கற்பனை ஆற்றல் மேலெழும்.

புதிய புதிய கற்பனைகள் உருவாக ஊக்குவிக்க வேண்டும். அவாகள் உருவாக்குகிற வடிவங்கள் அவர்களுக்கு மகிழ்வு தருவதோடு, பல்வேறு வடிவங்களின் அடிப்படைத் தன்மைகளையும் அவர்களுக்குள் உருவாக்குவதாக அமையும்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278