கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 02

முகமூடிகள் செய்ய.

இளம் மழலையர்கள் விலங்குகள், பறவைகள் போல ஒப்பனை செய்து கொண்டு ஆடிப்பாடிட விருப்பம் உடையவர்களாக இருப்பார்கள். விலங்குகள் பறவைகள் போல ஒலி எழுப்பவும் அவை போல நடக்கவும், பறக்கவும் செய்வார்கள்.

யானை, புலி, சிங்கம், முயல் போல நடந்து பார்ப்பதில் அவர்களுக்கு மகிழ்வு அதிகம்.

விலங்குகளின் முகத் தோற்றத்ததை அட்டையிலே வெட்டி எடுத்து வண்ணம் தீட்டி காதுப் பகுதியில் நூலைக்கட்டி அவர்கள் தலையில் கட்டி விட்டால், அவர்கள் அடையும் மகிழ்விற்கு எல்லையே இல்லை. ஆசிரியரின் கற்பனைக்குத் தகுந்தவாறு விலங்குகளை இணைத்து நாடகங்களை உருவாக்கி மாணவர்களை நடிக்க வைத்தும் மகிழ்வூட்டலாம்.


முகமூடிகள் உருவாக்கும் முறை :-

ஆசிரியர்கள் படத்தில் காட்டியுள்ளவாறு விலங்குகளின் உருவத்தை வெள்ளைத் தாளில் வரைந்து பழகவும். பிறகு மாணவரின் முகத்தை மூடும் அளவுடைய வரைபடத்தாள் அட்டையை (Chart) எடுத்துக் கொள்ளவும். அதைப் பாதியாக மடிக்கவும், விரும்புகிற விலங்கின் பாதி முக உருவத்தை அட்டையில் வரையவும். கத்தரிக்கோலால் வெட்டி எடுக்கவும். வெட்டியெடுக்கப்பட்டுள்ள விலங்கின் முகத்தை வண்ணத்தால் அழகுபடுத்தவும். இருபுறமும் நூலைக் கட்டி காதில் மாட்டி விடவும். மழலையர்கள் மகிழ்ச்சிக் கூத்தாடுவார்கள்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278