கல்வி ஆராய்ச்சிகள்

வரிசை எண் : 01

எண்கள் 5 முதல் 10,000 வரை அறிய....

இரண்டு, மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விளையாட்டு வழியில் கணக்குப் பாடத்தில் 5 லிருந்து 10,000 வரை தெரிந்து கொள்வதற்கு உதவுகிற விளையாட்டு இது. விளையாடுவதற்குரிய விதிமுறைகள் அட்டையில் தரப்பட்டுள்ளன. சதுரக் கட்டையையோ அல்லது சோழியையோ உருட்டி விழும் எண்ணுக்கு ஏற்றவாறு காயை நகர்த்தவும். கீழே தரப்பட்டுள்ள அட்டையைப் பெரியதாக்கிப் படியெடுத்துக் கொண்டு விளையாடவும்.



கீழுள்ள அட்டையப் பெரியதாக்கி, தனித் தனியாக வெட்டி,
இடத்தை வாங்கும் குழந்தைக்கு அடையாளமாகத் தரவும்.



ரூ1000 தாளில் 4 தாள், ரூ500 தாளில் 6 தாள், ரூ100 தாளில் 10 தாள்,
ரூ 50 தாளில் 28 தாள், ரூ 20 தாளில் 20 தாள், ரூ10 தாளில் 20 தாள்,
ரூ 5 தாளில் 20 தாள், என அச்சாக்கிக் கொண்டு ரூ 5000 த்தை இருவருக்கும்
கொடுத்து விட்டு விளையாட்டைத் தொடங்கச் சொல்லவும்.



விதிமுறைகள்

1. மூன்று மாணவர்கள் விளையாடலாம்
2. ஒருவர் வங்கியாளர், இருவர் விளையாடுபவர்
3. முதலில் தொடங்கும் இடத்தில் விளையாடுபவர் இருவரும் அவரவருக்குரிய பாசி / மணியை வைக்கவும்
4. சதுரக் கட்டையை உருட்டி விட்டு விழுகிற புள்ளிகளுக்கு ஏற்றவாறு அவரவரும் நகர்த்த வேண்டும்.
5. செல்லுகிற கட்டத்திலுள்ள பொருளுக்குரிய விலையைக் கொடுத்து வங்கியிடம் இருந்து வாங்கலாம். அல்லது அதற்குரிய வாடகையை வங்கிக்குத் தரவேண்டும்.
6. வங்கியிடமிருந்து இடத்தை ஒருவர் வாங்கி விட்டால் அந்த இடத்திற்கு வரும் அடுத்தவர் அதற்குரிய வாடகையைத் தரவேண்டும்
7. விளையாடுபவர் அந்த இடத்தை வாங்க விருப்பம் இல்லை என்றால் அதற்குரிய வாடகையை வங்கிக்குச் செலுத்த வேண்டும்.
8. வங்கி உள்ள இடத்திற்குச் செல்லும் விளையாடுபவருக்கு வங்கி ரூ200 ஊக்கத் தொகை தரும்.
9. விளையாடுவதற்கு முன்பு மொத்த பணத்தை இரண்டு சம பகுதியாகப் பங்கிட்டு பிரித்துக் கொள்ள வேண்டும்.


www.thamizham.net - pollachinasan@gmail.com - 9788552061 - (04259)221278