|
இதழ் எண் : 74
16 மார்ச்சு 2008
|
அன்புடையீர். வணக்கம்,
காந்திகிராம் பல்கலைக் கழகத்தின், தமிழ்த் துறை 2008 மார்ச் 27 அன்று சிற்றிதழ்கள் பற்றிய கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. தற்பொழுது வெளியிடக்கூடிய இதழ்கள், இணைய இதழ்கள் பற்றிய பகிர்வாக இந்தக் கருத்தரங்கு அமையும் என்று நம்புகிறேன். தொலைக்காட்சி திரைப்படம் என நெருக்குகிற பல்வேறு சூழல்களுக்கு இடையிலும் சிற்றிதழ்கள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒவ்வொரு இதழாசிரியரும் தனது சொந்த பொருளிழப்பில் தொடர்ந்து இதழ் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு இதழ் வெளியிடும் பொழுதும் அவர்கள் படும் வேதனை அளப்பரியது. ஏன் இப்படிச் செய்கிறார்கள் ? மக்களுக்கு எதைச் சொல்ல விரும்புகிறார்கள் ? இதற்கு முடிவுதான் என்ன ? இந்த வினாக்குறியோடு அடுத்த இதழில் சந்திப்போம்.
இந்த இதழில் தமிழ் ஹெரிட்டேஜ் நடத்துகிற இணையதளம் பற்றிய குறிப்பினை இணைத்துள்ளேன், தமிழ்ப் புத்தகங்களை மின் புத்தகங்கள் ஆக்குகிற இவர்களது செயல் வாழ்த்துதற்குரியது. தமிழம் வலை இவர்களது செயலினை அன்போடு வாழ்த்துகிறது.
என்றும் அன்புடன்,
பொள்ளாச்சி நசன், 16 - 03 - 2008
|
மின் புத்தகங்களாகும் தமிழ் நூல்கள்
வணங்குதற்குரிய http://www.tamilheritage.org இணையதளம்
|
திருமிகு சுபாஷினி கனகசுந்தரம் அவர்கள் எனக்கு ஓரு மின்அஞ்சல் அனுப்பியிருந்தார்கள். கையெழுத்துப் பிரதிகளாக, ஓலைச்சுவடிகளாக, மறைந்து கிடக்கிற தமிழ் நூல்களுக்குப் புத்துயிர் கொடுத்து மின் புத்தகங்களாக்கி இணையத்தில் வைப்பதாக எழுதியிருந்தார்கள். உண்மையிலேயே தமிழர்கள் கைகூப்பி வணங்க வேண்டிய செயல்இது. கால ஓட்டத்தில் பல சுவடிகள் அழிந்துவிட்டன. பெருமை பேசிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை. இருப்பவற்றையாவது பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உடையவன் நான். அந்த வகையில் மதுரைத்திட்டதின் செயற்பாடு மறக்க முடியாதது. 281 பழந்தமிழ் நூல்களை படவடிவக்கோப்புகளாக்கி இணையத்தில் வைத்து இலவச வலையிறக்கம் செய்ய ஊக்கி வருகிறது. இது போலவே தற்பொழுது தமிழ் ஹெரிட்டேஜ் என்கிற இந்த அமைப்பும் நூல்களைத் தேடித் திரட்டி பாதுகாக்க முனைந்துள்ளது என அறிந்ததும் மிகவும் மகிழ்ந்தேன். இந்தப்பணியினைச் செய்கிற ஒவ்வொருவரும் தமிழுக்கான உயர் தொண்டு ஆற்றுபவர்கள் தான். தமிழ் ஹெரிட்டேஜ் என்கிற இந்த அமைப்பினையும் அதன் தொடர்பாளர்களாக இருக்கிற அத்துணை நண்பர்களையும் தமிழம் வலை தலைவணங்கி வாழ்த்துகிறது. கீழே அவர்கள் ஆக்கியுள்ள நூல்களின் பட்டியலைக் காணலாம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய நூல்களை உருவாக்கி மின் அஞ்சலில் செய்தி கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்களது முழுப்பணி காண http://www.tamilheritage.org இணையதளத்தை நீங்களும் பாருங்களேன். அன்புடன் - பொள்ளாச்சி நசன் -
|
Manuscripts in Electronic
Form [E-Book]
1. கொங்கன் படை
(Kongan Padai) [ Published on: Dec 2001
]
16 ஆம் நூற்றாண்டு நூல் - மூலம் - சுவடி
An ancient palm leaf manuscript, published
for the first time, reveals the circumstances, war events and contemporary
festivities in commemoration of a sixteenth century war.
Digitization: Dr.N.Ganesan, Texas, USA Electronic Book
Preparation: Dr.N.Kannan, Boeblingen, Germany Originl Book
Contribution: Dr.N.Ganesan, Texas, USA
2. அபிதான கோசம் (Abithaana Kosam) [ Published on: 26 Jan 2002 ]
A
Glossary on Tamil Religion. (20th Century) - The Tamil Classical
Dictionary (as titled in the book)
Digitization: Dr.N.Kannan and Ms.Subashini
Kanagasundaram Electronic Book Preparation: Ms.Subashini
Kanagasundaram Originl Book Contribution: Mr.Sivalingam
(Uthayanan)-Finland
3.கண்ணுக்குள் வெளி(KaNuKul Veli) [ Published on:
02 Feb 2002 ]
An introduction to Modern Tamil Sculptor, Painters
and Artists (20th Century) சமகாலத் தமிழக ஓவியர்கள், சிற்பிகள், கலைஞர்கள் Digitization:
Dr.N.Kannan Electronic Book Preparation: Ms.Subashini
Kanagasundaram Originl Book Contribution: Tamil Ini 2000, Conference
Chennai, India.
4.
எக்காலக் கண்ணி(Ekkalak Kanni) [ Published
on: 29 March 2002 ]
A tamil religious text - Saivism (Middle
ages) சித்தர் பாடல்கள் Digitization: Dr.N.Kannan Electronic Book Preparation:
Ms.Subashini Kanagasundaram Originl Book Contribution: Government
Oriental Manuscript Library, Chennai, India.
5.கோதை நாச்சியார் தாலாட்டு (Kothai Naachiyar
Thalattu) [ Published on: 31 March 2002 ]
பெரியாழ்வார் கண்ணணுக்கு பிள்ளைத்தமிழ் பாடிய பாணியில் ஆண்டாளுக்கான பிள்ளைத்தமிழ். காலமும் ஆசிரியரும் தெரியவில்லை. A
tamil religious text - Vaishnavism (Middle ages)
Digitization: Dr.N.Kannan Electronic Book Preparation:
Ms.Subashini Kanagasundaram Originl Book Contribution: Government
Oriental Manuscript Library, Chennai, India.
6.ஆலயங்களில் நாதசுரம் வாசிக்க் வேண்டிய முறைகள் (Nadhaswaram -The
temple music) [ Published on: 31 March 2002 ]
நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள்
A short introduction to the Nateswaram (musical instrument)
melodies played in Hindu temple premises. (20th Century)
Digitization:Mr.N.D..Logasundaram E-Book
preparation:Mr.N.D.Logasundaram, Chennai, India Digital video clip of
Nateswaram music: Dr.N.Kannan, Boeblingen, Germany Original Book is a
publication of Swaminatha Tample, Swamimalai, India.
7.ஹைகோர்ட்டின் அலங்காரச் சிந்து (High
Court-in Alangara Cinthu) [ Published on: 05. April 2002
]
A poetical description of Chennai High Court (20th
Century) சென்னை ஹைகோர்ட் பற்றிய அந்தக்காலத்துச் சிந்துகவி (20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம்) Digitization:Dr.N.Kannan E-Book preparation:Ms.Subashini
Kanagasundaram Original Book from:Dr (med) Rangarajan, Tanjore,
India
8.நூதன விவேக லாகிரிச் சிந்து(Nuthana
Viveka Lahiri Cintu) [ Published on: 06. April 2002 ]
An
important work of early Singapore (1903) tamil literature. This work
explains the joy and sorrow of 'drug-intake' focussing mainly on
alcohol.
20 ஆம் நூற்றாண்டு - தொடக்கக்காலச் சிங்கப்பூர் இலக்கியம் - லாகிரி வஸ்துகள், மது பற்றியும் பிற பொறிநுகர் அனுபவங்கள் பற்றிய சிந்துகவி
Digitization:Dr.N.Kannan E-Book preparation:Ms.Subashini
Kanagasundaram Original book from:Dr (med) Rangarajan, Tanjore,
India
9.European
Missionarires and the Study of Dravidian Languages [ Published
on: 14 May 2002 ] (Notes on some books and manuscripts held in British
Museum) By Albertine Gaur
Digitization and
e-texting:Mr.N.D..Logasundaram E-Book preparation:Mr.N.D.Logasundaram,
Chennai, India
11.அறப்பளீசுவரர் சதகம் (Arapaleeswarar
Sathakam) ஆசிரியர் அம்பலவாணக் கவிராயர் காலம் 17 ஆம் நூற்றாண்டு By Ambalavaanak Kaviraayar; Period: 17th Century
A.D. [ Published on: 22 Oct 2002 ]
Part
I [PDF Format] Part
II [PDF Format] Part
III [PDF Format]
Book lending:
Mrs.Kamaladevi Aravindadakshan, Singapore E-Book preparation:
Ms.Subashini Kanagasundaram & Dr.N.Kannan
12.சிவ சிவ - வெண்பா Siva Siva Venpa [PDF
Format] ஆசிரியர் சென்னை மல்லையர் - காலம் 17 ஆம் நூற்றாண்டு Author: Senna Mallayar Period: 17th Century
A.D. [ Published on: 27 Oct 2002 ]
Book
lending: Mrs.Kamaladevi Aravindadakshan, Singapore E-Book preparation:
Ms.Subashini Kanagasundaram & Dr.N.Kannan
13.இரங்கேசர் வெண்பா (Irangkesa Venpa) [PDF
Format] ஆசிரியரும் காலமும் சரியாகத் தெரியவில்லை - சிவ சிவ வெண்பா உருவான காலத்திற்குப் பின்னது என்று தெரிகிறது Author:
unknown Period: Late 17th Century A.D. (?) [ Published on: 27 Oct
2002 ]
Book lending: Mrs.Kamaladevi
Aravindadakshan, Singapore E-Book preparation: Ms.Subashini
Kanagasundaram & Dr.N.Kannan
14.பாவேந்தர் இயற்றிய கதர் இராட்டினப் பாட்டுkathar
raattinap paattu Author: Barathidasan Period: 20th Century
(1930) [ Published on: 10 March 2003 ]
Book
lending: Mr.Maalan, Editor, Journalist; Chennai E-Book preparation:
Mr.M.D.Logasundaram & Dr.N.Kannan
15.மும்மணிக் கோவை (MuMaNiKovai) [ Published on: 30
Dec 2003 ] A Collection of Tamil Poem வைணவ, சைவ பிரபந்தங்களின் தொகுப்பு Digitization:
Ms.Subashini Kanagasundaram Electronic Book Preparation: Ms.Subashini
Kanagasundaram Originl Book Contribution: Dr.K.Loganathan [Penang,
Malaysia]
16.நல்லதங்காள் கதை(NaLaThangal Kathai) [ Published
on: 03 Jan 2004 ] A pupular Tamil Folk Story நல்லதங்காள் கதை Digitization:
Ms.Subashini Kanagasundaram Electronic Book Preparation: Ms.Subashini
Kanagasundaram Originl Book Contribution: Dr.K.Loganathan [Penang,
Malaysia]
17.ஸ்ரீ ரங்கநாதர், ஸ்ரீ ரங்கநாயகி ஊசல்(Sriranganayaroosal
Srirangkanayakiyoosal [ Published on: 10 Jan 2004
]
Vaishnava Literature மூலமும் உரையும் Digitization: Ms.Subashini
Kanagasundaram Electronic Book Preparation: Ms.Subashini
Kanagasundaram Originl Book Contribution: Dr.K.Loganathan [Penang,
Malaysia]
18.பாண்டியம் Pandiam [ Published on: 1 July 2004
]
Courtesy:
Digitization:Dr.N.Kannan E-Book
preparation:Dr.N.Kannan Special thanks to:Mrs.Nalini Persad,
British Libaray, London
19.சூச்சூ (சீன மொழி பெயர்ப்பு ) - சி. சுப்பிரமணிய பாரதி Chu-chu -
Translation from Chinese by Subramania Barathi [ Published on:
26 August 2004 ]
Courtesy:
Digitization:Anto Peter E-Book
preparation:Subashini,K
20.1. கப்பல் சாத்திரம் 2.சில்ப சாத்திரம்1.Kapal Sasthiram 2.
Silpa Sastiram [ Published on: 25 Aug 2004 ]
1. கப்பல் சாத்திரம் 2.சில்ப சாத்திரம்
Digitization:
Dr.N.Kannan Electronic Book Preparation: Ms.Subashini
Kanagasundaram
21. புருட சாமுத்திரிகா லட்சணம்Puruda Samutrika
Lakshanam [ Published on: 11 Aug 2004 ]
புருட சாமுத்திரிகா லட்சணம்
Digitization:
Dr.N.Kannan Electronic Book Preparation: Ms.Subashini
Kanagasundaram Originl Book Contribution: Dr.Prema [Tanjavur, Tamil
Nadu]
22.
பேரூர் பச்சைநாயகி அம்மை ஆசிரிய விருத்தம்(1878) pErUr
paccai nAyakiyammai Aciriyaviruththam (1878) [ Published on: 19
Oct 2004 ]
பேரூர் பச்சைநாயகி அம்மை ஆசிரிய விருத்தம்
Electronic Book Preparation: Dr.N.Kannan Originl Book
Contribution: Dr.N.Ganesan, Texas, USA
23. ஆதியூர் அவதானி சரிதம் (1875) Athiyur Avathani Saritham
(1875) [ Published on: 10 Jan 2007 ]
24. அண்ட கோள மெய்ப்பொருள் (1934) Anda KoLa MeypPoruL
(1934) [ Published on: 11 Feb 2008 ]
This book is a
contribution from Dr.N.Ganesan of NASA, Texas, USA. pdf e-Book
preperation:Dr.N.Ganesan You may like to know him better through his
blog: http://nganesan.blogspot.com/)
25.
பின் ஞானம் நூறு (1903) Pin NjaNam NUru
(1903) [ Published on: 23 Feb 2008 ]
Original Book
contribution:Dr.Ira.Vasudevan, Chennai, India e-Book preperation:
Subashini Kanagasundaram Special thanks to THF Chennai office
Cordinator Anto Peter, Chennai, India
26.
கற்பமுப்புக் குரு நூல் (1929) KaRpamUPu GuRu Nool
(1929) [ Published on: 24 Feb 2008 ]
Original Book
contribution:Dr.Ira.Vasudevan, Chennai, India e-Book preperation:
Subashini Kanagasundaram Special thanks to THF Chennai office
Cordinator Anto Peter, Chennai, India
27.
தியாகராச லீலை (1928) Tyagarasa LIlai
(1928) [ Published on: 25 Feb 2008 ]
Original Book
contribution:Dr.K.Loganathan, Penang, Malaysia Digitization: Subashini
Kanagasundaram E-Book preperation: Subashini Kanagasundaram
28.
மணோன்மணியாள் நாற்பத்து முக்கோண பூஜாவிதி (1929)
MaNonmaniyaL NaRpaThu MuKona Pooja Vithi(1929) [ Published on:
29 Feb 2008 ]
Original Book contribution:Dr.Ira.Vasudevan, Chennai,
India e-Book preperation: Subashini Kanagasundaram Special thanks
to THF Chennai office Cordinator Anto Peter, Chennai, India
29.
சட்டைமுனி நாயனார் முன் ஞானம் நூறு (1903) SaTai Muni
Nayanar Mun Njanam NooRu(1903) [ Published on: 29 Feb 2008
]
Original Book contribution:Dr.Ira.Vasudevan, Chennai, India
e-Book preperation: Subashini Kanagasundaram Special thanks to THF
Chennai office Cordinator Anto Peter, Chennai, India
30.
புதிய புத்தக கேட்லாக் (1929) New Catalouge of
Books(1929) [ Published on: 29 Feb 2008 ]
Original Book
contribution:Dr.Ira.Vasudevan, Chennai, India e-Book preperation:
Subashini Kanagasundaram Special thanks to THF Chennai office
Cordinator Anto Peter, Chennai, India
|
சித்தர் நூலில் காணப்படுகிற சிலம்பம்பற்றிய செய்தி
|
பாரப்பா சிலமபடிக்க உக்கி தெண்டம்
பதிவான ஆதியந்த மார்தான் காண்பார்
நேரப்பா தினந்தோறும் பழக்க மானால்
நின்புசமும் கால்பிலமும் நிலக்கு மப்பா
ஆரப்பா உனக்குநிகர் ஒருத்த ரில்லை
ஆகாத சத்துருதான் வந்தெதிர்த்தா னாகில்
காரப்பா கைதனிலே சோட்டா வாங்கி
கருச்சான வீச்சுபோல் காலைக் காணே
காணவே கால்வாங்கி பக்கஞ் சென்று
கையிலிருந்த சோட்டாவால் கண்ணைப் பார்த்து
ஊணவே குதிரைமுக மூஞ்சி தன்னை
யுடைத்துவிடு கீழ்விழுந்து உதைத்துக் கொள்வான்
பேணவே கெருட பட்சி வீச்சு போல
பெருகிநின்ற பிடரியிலே பெலமாய்ப் போடு
தோணவே பொறிகலங்கி சுழன்று போவான்
தொழிலான இன்னமொரு சூட்சம் கேளு
சுகமான கழுகினிட வீச்சு போலே
நெளியாமல் நின்றுவலங் கொண்டு அந்த
நேர்மையுடன் பொருத்தரிந்து குருத்தில் போடு
சுழியான சுழிமயங்கி பரித விப்பான்
சுழியறியாப் பாவிகளை தொடர்ந்து வெட்டு
கெலியான மனதுறைத்துப் பெலமாய் நிற்க
கணபதியை மின்னிருத்தி தெண்டம் பண்ணே
பண்ணப்பா யின்னமொரு சூட்சங் கேளு
பதியறியா மூடர்கள் வந்தெதிர்த்தா ராகில்
நண்ணப்பா அவனெதிரே புலிபோல் நின்று
நாட்டமுடன் யிடசாரி வலசாரியாக
முண்ணப்பா பின்னாக நின்றுக் கொண்டு
முழிப்பறிந்து நினைத்தபடி முட்டாலாகம்
கண்ணப்பா முழிப்பாக யெதிர் கொண்டேகில்
கலந்து நின்ற படைதனிலே நீந்தலாமே
நீஞ்சுவகை தனையறிந்து பெலவான் வந்தால்
நிலையான பட்சியுட வீச்சைக் கொண்டு
பாஞ்சுநின்ற சோட்டாவின் கெதியைக் கொண்டு
பத்தியுடன் யிருபேரும் பக்கத் தேகி
வாஞ்சல்லிய மாகவேதா னொன்றுக் கொன்று
வணக்கமுள்ள வீச்சுமுறை மகிழ்நது கொள்வார்
ஊஞ்சலிட சாரிவல சாரி கண்டு
உறுதியுடன் யிருமனது மொன்றாங் காணே
ஒன்றாமல் கூத்தாட்ட மாக நின்று
உருமிவெகு சாய்க்குதித்து முலகப் பேடை
நன்று நன்று நின்றநிலை தன்னிலேதான்
நாட்டமுடன் நிலையறிந்து தட்டிப் போட்டால்
குனாறாகத் தனுழன்று மனப்பேயாகி
குணமாக உனதுபதம் பணிந்தானானால்
பன்றான தொழில் முறையில் ஒன்று சொல்லி
பதியறிவாய் தானிருப்பார் அண்ணாவி தானே
அண்ணாவி தானமக்கு ஆசா னென்று
அடிபணியா மூடர்கள்வந் தெதிர்த்தா ராகில்
விண்ணாட்டஞ் சுழினையிலே தீபம் நோக்கி
விபரமுடன் கம்கமபீறிங் தம்மென்று தான்
முன்னாகத் தான்செபித்து பார்க்கும் போது
முனைமழுங்கி யறிவுகெட்டு முகமும் சோர்ந்து
கண்ணான கண்மயங்கி காலும் சோர்ந்து
கட்டிநின்ற கந்தகம்போல் முழிப்பான் பாரே.
- அகத்தியர் பூரணகாவியம்
|
பெண் எழுதும் காலம் - நூல் ( அ.வெண்ணிலா)
|
என் இனிய தோழா,
வணக்கம் நலம்தானே.
உன்னுடன் பேசி எத்தனை யுகங்களாகின்றன. உன்னுடன் பேசுவது எவ்வளவு பிடித்தமானது தெரியுமா? அம்மா மகனுடன் பேசுவதை விட, அக்கா சகோதரனுடன் பேசுவதை விட, காதலன் காதலியுடன் பேசுவதை விட, கணவன் மனைவியுடன் பேசுவதை விட, தோழனும் தோழியும் பேசிக் கொள்வது புரண்டோடும் வெள்ப்பெருக்கை எதிர்த் திசையில் எதிர்கொள்ளத் தூண்டும் உற்சாகத்திற்கு நிகரானது. ஆணும் பெண்ணும் நட்பாவது தேனீர் அருந்துவது போல் ரசனையானது. வாழ்விற்கு சுவாரசியம் சேர்ப்பது.
எதிரெதிர் துருவங்களே ஈர்க்கும், ஆணும் பெண்ணுமாகிய நம் இரு துருவங்களை நெருங்க விடாமல் இடையில் கல்லைப் போல் உட்கார்ந்திருக்கிறது சமூகம்.
உனக்கு நினைவிருக்குமா நண்பா, முதல் வகுப்பில் நாம் இருவரும் அருகருகே அமர்ந்த இருக்கை. அந்த இருக்கையைப் பிடிக்க நாம் நமக்குள் தவித்த தவிப்பு, முதல் பெஞ்சின் இருக்கையினைப் பிடிக்க எல்லோரும் எட்டு மணிக்கே வருவார்கள் என்றால் நாம் இருவருமே ஏழே முக்காலுக்கே வந்துவிடுவோம். நாம் அருகருகே அமரும் அந்த வினாடி முதல்தான் நமக்குள் துவங்கும் அந்த நாள். எச்சில் கமர்க்கட்டும், மணல் அப்பிய நெல்லிக்காயும், தொண்டையடைக்கும் கொடுக்காப்புளியும் நம் மனசு நிறையச் செய்யும், எச்சில் நமக்கு நோய் உண்டாக்கியதாக நினைவே இல்லை.
முழங்கால் மடக்கிப்போட்டு விட்டு கையை துண்டில் துடைத்துக் கொள்ளும் சோனாசலம் வாத்தியாரை நினைவிருக்கிறதா தோழா ! ஆணும் பெண்ணும் காரணமின்றி அருகருகே உட்காரக்கூடாது என போதித்த முதல் சமூகப் பிரதிநிதி அவர்தான். அதென்னப் பொம்பளப் பசங்களும், பையன்களும் ஒன்னா உட்காந்துக்கிட்டு, டேய் பையங்களாம் இடப்பக்க பெஞ்சிக்கு போ, பொண்ணுங்களாம் வலப்பக்க பெஞ்சுக்கு போ - என நமக்குள் பால் பிரிவினை விதி(தை)த்தவர்.
பையனாய் பிறந்திருக்கக் கூடாதா என விம்மி அழுதது இன்னும் வலிக்கிறது, மறுநாள் என் அண்ணனின் டிரவுசர் சட்டையைப் போட்டுக் கொண்டு உன் பக்கத்தில் உட்கார்ந்தேன். மூக்குப்பொடி வாத்தியார் சட்டையைப் பிடித்து இழுத்து, ஏமாத்தற கழுத - என வலது பக்க பெஞ்சுக்கு இடமாற்றியதும் சுரீரெனச் சுட்டது.
பள்ளியில் நம் பேச்சுக்கான நேரம் சருங்க, நம் முகங்களும் மகிழ்ச்சியைத் தொலைத்துச் சுருங்கிப் போயின. இழந்த நம்மை மீட்டுக் கொள்ள மாலை நேரங்களுக்குள் அடைக்கலமானோம். இருள் உலகை அணைத்துக் கொள்வதைக்கூட உணர இயலாமல் நம் விளையாட்டுக்கள் தொடரும். முதலில் விளையாட்டாக நம்மைப் பார்த்த அம்மா அப்பாக்களுக்கு நாட்கள் கடக்கக் கடக்க, சிறு வயது நெருக்கேம் அச்சமேற்படுத்தியது. ஓயாம என்னடா பொட்டப் புள்ளையோட விளையாட்டு - என்று உன்னையும் - ஆம்பளப் பசங்கக் கூடெல்லாம் கண்ட நேரத்துக்கும் சுத்தற - என என்னையும் திட்டித் தீர்த்தார்கள்.
நண்பா ! ஆறு வயதிலேயே நீ ஆணாகவும், நான் பெண்ணாகவும் மாறிய வரலாற்றுச் சோகம் நம் தேசத்திற்கே சொந்தம்.
உன்னையும் என்னையும் நெருங்கவிடாமல் இருபக்கமும் இழுக்கும் மாயக் கயிறுகளை உணர வேண்டாமா, உணர்ந்து அறுத்தெறிய வேண்டாமா ?
பால் பேதமற்று நாம் பேசத் தொடங்குவது எப்போது ?
|
எமக்கு வந்த - நிகழ்ந்தவை, நிகழவிருப்பவை
|
தமிழியச் செய்திகளை எமக்கு அனுப்பி உதவுங்கள்
|
தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061
|