நீலக்குயில் பாடுகிறது. 1992 களில் சமூக இலக்கிய விழிப்புணர்வுத் திங்களிதழாக வெளிவந்த இதழ். சிறப்பர்சிரியர் சம்பத் ராயன், ஆசிரியர் மற்றும் வெளியிடுபவர் கவிஞர் சுதா (இசக்கி). இதழின் நோக்கமாக சமூக பொருளாதார விடுதலை மற்றும் சகோதரத்துவம். சமதர்மம் ஆகியவற்றை அடைவதற்கு உண்டான புரட்சிகரப் பண்பாட்டு இலக்கியம் வளரப் பாடுபடுவது - எனக் குறிப்பிட்டுள்ளது, சென்னை சேத்துப்பட்டிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. பார்ப்பனிய எதிர்ப்புக்கு முழுஉருவம் என அம்பேத்கர் பற்றிக் குறிப்பிட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இயங்கிய ஏ.பாக்கியராஜ் அவர்களின் நேர்காணல் இதழில் காணப்படுகிறது. விழித்துக் கொள் தோழா என சம்பத்ராயன் தலைவர் செடியூல்டு மக்கள் மாமன்றம்- கட்டுரை எழுதியுள்ளார். ந.இராசையா எழுதிய விடுதலைப் போரில் தாழ்த்தப் பட்டோரின் பங்கு என்ற குறிப்பும் அருமையானதே. இ,மோத்தி அம்பேத்கர் பற்றிய தொடர் கட்டுரை எழுதியுள்ளார், செ.கு.தமிழரசன் அவர்களுடனான கலந்துரையாடலும் இதழில் உள்ளது. கலைச் சேவகர் பலராமனும் கருத்து எழுதியுள்ளார்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,