நிறப்பிரிகை.1990 களில் வெளிவந்த இதழ் இது. இது இதழ் 1. அக்டோபர் மாதம் இதழ் வெளிவந்துள்ளது. கும்பகோணம் கோதண்டபானித் தெருவிலிருந்து அ.மா., வேல்சாமி, பொதியவெற்பன், ரவிக்குமார் - ஆசிரியர் குழுவின் முயற்சியால் வெளிவந்த நவீன இலக்கிய விமர்சன அரசியல் புரட்சி இதழ். இதழின் கட்டுரைகள் செறிவாகவும். நுட்பமாகவும் இருக்கும். இதழின் முன் அட்டையிலும் பின் அட்டையிலும் உள்ளதை இங்கே காண்போம். ரசியா சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் அவை மார்க்சியத்தின் முன் எழுப்பியுள்ள கேள்விகளும் சமச்சீரற்ற அறிவுப் பரவலும் அதிகாரத்தின் செயல்பாடுகளும், புரட்சியை நோக்கி - சில உளவியல் பிரச்சனைகள், துப்பாக்கியும் பள்ளிக் கூடமும் - நூல்மீதான பிரதிபலிப்புகள், கத்தரிடம் சில கேள்விகள், நூல் விமர்சனம் மக்கள் அநீதியை ஏற்பதில்லை மக்கள் என்றும் தோற்பதில்லை சோசலிசமும் முதலாளிய மீட்சியும், மார்க்சியம் தேசிய இனப் பிரச்சனை - இன்று கவனத்தில் எடுக்க வேண்டிய படிப்பினைகள். அடுத்த இதழில் வர இருப்பவை - பாலியல் ஒடுக்கு முறையின் சமூகச் செயற்பாடுகள், நவீன விஞ்ஞானம், மார்க்சியம் மற்றும் மாந்தனுடைய விடிவு, வியத்நாமியக் கம்யூனிசத்தின் பிரத்யேகத் தன்மைகள், காஸா இது கலகமல்ல ஒரு போர், மதவாதமும் வரலாறும், தேசிய இனப்பிரச்சனை குறித்த கூட்டுக் கட்டுரை மற்றும் இட ஒதுக்கீடு கட்சி அமைப்பு குறித்த சில கட்டுரைகள்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,