மெய்த் தமிழ். 1990 களில் புதுவையிலிருந்து மெய்ப்பொருள் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் இது. இது 5 ஆவது இதழ் எத்தனை இதழ்கள் வெளிவந்துள்ளன எனத் தெரியவில்லை. இதழ் தனித் தமிழுக்காக வெளிவந்துள்ளது. ஆசிரியர் புலவர் நதி. சிறப்பாசிரியர் பண்டுவர் அரிமா மகிழ்கோ. மரபுப் பாக்கள், சிறு சிறு குறிப்புகள் போன்றவை உள்ளன. தமிழ்ச் சொற்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. செய்திகள் வாசிப்பது விடுதலை நரி என்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளது. மகிழ்கோவின் வேர்த் தமிழ்ச் சொற்களும் வெளியிடப்பட்டுள்ளன. தனியிதழ் ரூ 2 என்று குறிப்பிட்டுள்ளது - பின் அட்டையில் உள்ள பா இது. கோவாவின் மக்களைப் போல் நாமும் இன்றே கொதித்தெழுந்து போராடுவோம் சாவா இல்லை வாழ்வா என்றே சரித்திரத்தைப் படைத்திடுவோம் நோவாமல் தில்லிக்கு நேரடி அடிமைகளா நுரைகடல்சூழ் புதுநிலத்தைப் பூவாது பூத்த மொழிவாரி மாநிலமாய்ப் புதுக்கிடுவோம் புரட்சி செய்தே. இந்தப் பாவினை வரி வரியாகப் படித்துப் பார்த்தால் இது ஏன் நடைபெறவில்லை எனப் புரியும். புலியாகப் புறப்பட்டவன் இலக்கு அரிமாவாக இல்லாமல் எலியாக இருப்பதன் தன்மை புரியும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,