உழவன் உரிமை. 1986 களில் சென்னையிலிருந்து கோ. வீரய்யன் வெளியிட்ட இதழ். இது 5 ஆம் ஆண்டின் 3 ஆவது இதழ். உழவர்களுக்கான உரிமைக் கூட்டமைப்பை ஏற்படுத்தி தொடர்ந்துள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாட்டின் கீழ் மக்கள் உணவுக்கும் தள்ளாடுவதை மிகச் சிறப்பாகப் படங்களின்வழி வெளியிட்டுள்ளது. 40 ஆண்டுகளாகியும் - சுதந்திர பூமியில் குடிமனைக்காகப் போராட்டம் என்ற கட்டுரை உணர்வூட்டக்கூடியதே. வி.ஜி.பி. நிறுவனததின் தில்லுமுல்லுகளை சான்றுகளுடன் நிரூபித்துள்ளது. ஆனால் அரசும் அதிகாரிகளும் பணக்காரர்கள் பக்கமே நின்று - துணைபுரிந்தமை இதழ்வழி புலப்படுகிறது. விவசாய சங்க அமைப்புகள் நிகழ்வு பற்றி எழுதியுள்ளது. முதலாளித்துவதத்தின் முகத்திரை விலகுகிறது என்ற ரிலைன்ஸ் கம்பெனி தொடர்பான கட்டுரை சிறப்பாக உள்ளது. மிளகாயும் இனிக்கும் மண்டி முதலாளிகளுக்கு - என்று தரகுவேலையில் பணம் சுருட்டும் முதலாளியத்தைச் சுட்டிக் காட்டுகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,