ஏழையின் குமுறல். 1986 களில் குமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து பதிவுபெற்ற இதழாக வெளிவந்த மாதஇதழ். ஆசிரியர் எம்.எக்ஸ். இராசமோனி, இதழில் நிறைய துணுக்குச் செய்திகள் உள்ளன. ஒவ்வொரு துணுக்குச் செய்தியும் உழைப்பவர்களின் முன்னேற்றத்திற்காகப் பலமுனைகளில் இணைக்கப்பட்டதே. இதழில் சொத்து சேர்த்துள்ள அரசியல்வாதிகள், வரிகட்டாமல் ஏமாற்றும் சினிமாக்காரர்கள், கள்ளக் கடததல், ஊழல் எனக் குறுக்குவழியில் பணம் சுருட்டும் முதலைகள் - பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளது. மே நாள் பற்றிய சிறப்புச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது. நூறுகோடிபேர் பசி பட்டினி எனச் சர்வதேச அமைப்பு திரட்டிய கருத்துக் கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் பட்டினியால் மடிவோர் ஒன்றரை கோடி பேர்
ஒவ்வொரு நாளும் பட்டினியால் மடிவோர் 3500 பேர்
ஒவ்வொரு நிமிடமும் பட்டினியால் மடிவோர 24 பேர்
(இந்த 24 பேரில 5 வயதிற்குள் உள்ள குழந்தைகள் 18 பேர்)


இந்தப் புள்ளி விபரம் அதிர்வூட்டுகிறது. தனியொருவனுக்கு உணவில்லை எனில் சகத்தினை அழித்திடுவோம் - என்ற பாரதியின் பாட்டை மேடை தோறும் முழங்குவது கேலிக்கூத்தாக அல்லவா இருக்கிறது. பசிப்பிணி என்னும் பாவி என்றனர், வாடிய பயிரைக் கண்டபோது வாடினர் - வீட்டின் வெளிப்புறத்தில் திண்ணை வைத்து, அமரவைத்து உணவு அளித்தனர். தமிழன் வாழ்வியலில் வேளாண்மை மேலெழுந்து நின்றது, உழவே தலை என்று அறிவித்தனர். இன்றோ - பொருளீட்டுவதே குறியாக - விளைநிலங்களில் தொழிற்சாலைகள் கட்டுகின்றனர். இனிவரும் காலங்களில் பொருள் கைநிறைய இருக்கும். சாப்பிட ஒன்றும் கிடைக்காது. கடித்தா திங்க முடியும் தங்கத்தை...??


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,