இன்று. 1986 களில் பெங்களூரிலிருந்து தமிழவன் அவர்களால் வெளியிடப்பட்ட திங்களிதழ். காவ்யா இதழின் சுற்றுக்கு உதவியுள்ளது. தனி ஈழம் கிடைத்தால் என டெலோ தலைவர் கருத்தினை இதழ் பதிவுசெய்துள்ளது. டெல்லி கலவரம் மீண்டும் ஒரு அக்டோபர் 31 என அ.மாரியப்பன் எழுதியுள்ளார். அறிவுமதியின் கவிதைகள் - தாவணி போட, தயாராகிவிட்டாள் தாயே, உன் கிழிசல் சேலையை கிழி, இரண்டாக - மக்களின் இரத்த வியர்வை வாசனை, அரசியல் வாதியின், ஆளுயர மாலைப் பூவில் - மூட்டைப்பூச்சியின், இரத்தத்தையும் குடிக்கும், அரசியல் சுவர்கள் - ஜன்னல் கம்பியல் தொங்கும், கண்ணீர் பல்புக்குள், காம மின்சாரம் - கம்பியில் கழுவேற்றம், கடிதங்களோடு, காதலும்தான் - ஈர ஆடைகளுடன், அவன் வந்தாள், நான் ஏன் சாம்பலானேன் - அட்சதை அரிசிதான், விழவில்லை, வாய்க்கரிசியாவது விழாதா? - அனாதைப் பிணததைச் சுற்றி, கூட்டம், நெற்றி காலணா காசுக்காக - தபால் பெட்டி கூட, அரசின் உண்டியல்தான், வேலை விண்ணப்பம் உறுஞ்சுகிறதே - நிலா மூக்கை மேகத்தில், துடைக்கிறது, கொடி மரங்களின் கீழே, பிணங்களின் வாடை - இவை அறிவுமதியின் குறும்பாக்கள் - அந்த அபத்தமான மாலை நேரம் சிறுகதை நெருடுகிறது, பாரதிராசாவின் முதல் மரியாதை படம் பற்றி எழுதியுள்ளது. இதழ் பல்சுவையாகப் பல்வேறு செய்திகளைச் சொன்னது. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |