லயம். 1986 இல் தனது 5 ஆவது இதழை வெளியிட்டுள்ளது. இது மூன்று திங்களுக்கு ஒரு முறை வெளிவருகிற இலக்கிய இதழ். ஆசிரியர் கே,ஆறுமுகம். ஈரோடு மாவட்டம் அந்தியூர் நகலூரிலிருந்து இதழ் வெளிவந்துள்ளது. இரண்டாம் ஆண்டு சந்தாதாரர்களுக்கு பிரமிள் எழுதிய ஆயி குறுநாவல் இலவசமாக அனுப்பி வைக்கப்படும் என்ற அறிவிப்பை இதழில் வெளியிட்டுள்ளது.பிரமிள் எழுதியுள்ள சிந்து முத்திரையும் சோமக் கிரியையும் என்ற கட்டுரை இந்த இதழில் உள்ளது. பிரமிளின் செ.குவேரா கட்டுரை அருமையாக உள்ளது. புதுமைப் பித்தன் - மெளனி சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற காலத்திற்கு அப்பால் சிறுகதை இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது. பிரமிளின் கவிதைகள் புதிய கோணத்தில் இருப்பவைகள். பிரமிளின் படைப்பாக்கங்களை அதிகமாகத் தாங்கி இந்த இதழ் தொடர்ந்து வெளிவந்துள்ளது. சுந்தரராமசாமிக்கு நேர் எதிராக நின்று பிரமிள் எழுதியவை சிந்திக்கத் தூண்டுபவையே. ( பிரமிள் ஒரு அபூர்வப் படைப்பாளி. அவரது ஆற்றல் அளப்பரியது. அவரது ஒவ்வொரு அசைவுமே புதுமையாக இருக்கும். அவர் ஒரு பன்முகப் படைப்பாளி. கவிதை. ஓவியம். சிற்பம். ஆழ்ந்த சிந்தனை. போராட்டம். என அனைத்திலும் புதிய கோணம் படைத்தவர். சாதாரண களிமண்ணைக் கொண்டு எந்தக் கருவியுமே இல்லாமல் சிறு கத்தியை வைத்துக் கொண்டு அவர் உருவாக்கிய களிமண் சிலை இன்னும் என் அறையில் இருந்து அவரை கண்முன் கொண்டுவந்து காட்டுகிறது )


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,