மாணவர் ஒற்றுமை. 1986 களில் அகில இந்திய மாணவர் ஜனநாயக மாணவர் அமைப்பின் சார்பில் மதுரையிலிருந்து அச்சாகி பதிவுபெற்ற இதழாக வெளியிடப்பட்ட இதழின் முதல் இதழ் இது. அக்டோ 85 இல் மறைந்த சச்சின் பேனர்ஜிக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் பாசிஸப் பிடியிலிருந்து கல்வியை விடுவிக்க அணிதிரளுவோம் - என்ற கட்டுரை உள்ளது. (நமது நாட்டுக்குத் தேவையான அடிப்படையான தரமான, சரியான கல்விமுறையை கல்வியாளர்களை வைத்து உருவாக்கி அதுபற்றிப் பேசாது, மாற்ற வேண்டும் என்று பேசி என்ன பயன்? இன்று வரை இதே நிலைதான் இங்கு இருக்கிறது. சரியில்லை என்பது உண்மைதான் - சரியானது எது என்ற ஒன்றை கண்டறிய ஒன்றிணைந்து செயல்படாது இருக்கும் வரை இதற்கு விடிவே கிடைக்காது) 1986 பிப் 20,21,22 தேதிகளில் மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து டெல்லியில் அகில இந்திய மாணவர் பேரணி - மாணவர் மாநாடு - என்ற குறிப்பை வெளியிட்டு கோரிக்கைகளையும் வரிசைப் படுத்தியுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,