நம்நாடு. 1984 இல் நம்நாடு அச்சகம் சென்னையிலிருந்து அச்சாகி வெளிவந்த திங்களிதழ். ஆசிரியர் க.திருநாவுக்கரசு. இதழில் பெரியார் நூலக வாசகர் வட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட கூட்டத்தின் பேசுபொருள் பற்றி குறிப்பிட்டுள்ளது. ஈரோடு குறளாய நிகழ்வு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. ஆரியம்தான் மாயை, திராவிடமல்ல என்ற மறுப்புரை இதழில் வெளிவந்துள்ளது. தும்பியின் தொகுப்பான முதன் முதலில் என்ற குறிப்புகள் சுவையாகவும் வரலாறு காட்டுவதாகவும் உள்ளன. (தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் - சிலப்பதிகார இசைத் தமிழ்ப் பகுதிகளைச் செவ்வையாக ஆராய்ந்து பெருந்தொகையைச் செலவிட்டு, ஆயப்பாலை, வட்டப்பாலைப் பண்திரிவு முறைகளையும் வீணையியல்பையும் (முதன் முதலில்) தம் கருணாமிர்த சாகரத்தின் வாயிலாக விளக்கிக் காட்டி, தமிழிசையின் முதன்மையும், தாய்மையையும் நிறுவியவர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரே) - இவ்வாறு உயரிய செய்திகளை இணைத்துள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,