நூதன விடியல். 1983 களில் விழுப்புரத்திலிருந்து ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி மையத்தின் தொடர்பு இதழாக இந்த இதழ் வெளிவந்துள்ளது. சமுதாயத்தில் அழுத்தப்பட்டுக்கிடக்கும் அடித்தளமக்களுக்காக விழிப்புணர்வோடு ஆசிரியர் உரையை எழுதியுள்ளது. நீதி தேடி அலையும் உஞ்சனை மக்கள் என அந்த மக்களின் அவலநிலையை எடுத்துக் காட்டியுள்ளது. குற்ற விசாரணைச் சட்டம் பற்றிய விளக்கத்தையும் எழுதியுள்ளது. அல்லி உதயன் எழுதியுள்ள வழி என்ற சிறுகதை காவல்துறை எப்படி மக்களை வதைக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிரதிபலிப்புகள் என வாசகர் கடிதத்தையும், நடந்தவை என நிகழ்ந்தவைகள் பற்றிய குறிப்புகளையும் வெளியிட்டுள்ளது. மக்களது பிரச்சனைகளைக் காட்டுகிற உரைவீச்சுகளும் இதழில் இடம்பெற்றுள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,