உதயக் கதிர். 1982 மே திங்களில் வெளிவந்த கலை இலக்கிய இதழ் இது. இதழைக் கண்ணியம் ஆசிரியர் திரு குலோத்துங்கன் அனுப்பி வைத்திருந்தார். சென்னையில் அச்சாகி பதிவு பெற்ற இதழாகத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாகியுள்ளது. ஆசிரியர் ச.அமுதன். பொறுப்பாசிரியர் சா.கணேசன். இது முதலாமாண்டின் 5 ஆவது இதழ். இந்த இதழில் தனசேகரன் எழுதியுள்ள கவிதையில் சில வரிகள் - மயக்க மெல்லாம் கலைக - தமிழர், மடமை யெல்லாம் தொலைக, அயர்வொழித்துத் தமிழர் - கிளர்ந்து, ஆர்பரித்தே எழுக. உயர் பகுத்தறி வெனும் - பரிதி, ஒளியில் தமிழர் நனைக, செயலனைத்தும் தமிழின் - தனிச், சீர்மை நாட்ட முனைக.... உருக்கு எஃகு வாள் நீ - பகைவர், ஒடியும் ஒதிய மிலார்கள், எரிமலைக் கூட்டம் நீ- பகைவர், எறும்புப் புற்றுகள் காண், வரிப் புலிக் கூட்டம் நீ - பகைவர், வயிறு காய்ந்த நரிகள், சரித்திரப் புயல் நீ - வீழும், சருகுகள் நம் பகையே.... ( இப்படி எழுதி எழுதியே இவனும் நீர்த்துப் போனான், கேட்டவனும் கிறுகிறுத்து மயங்கிப் போனான். உண்மை உணர்வுடன், செயற்பாடுகள் இல்லாமையால் - திசை மாறி மொழி உணர்வற்று - அடிமையாகிப் போனான் - இது வரலாறு) தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |