இளைய கரங்கள். 1982 கோவையிலிருந்து இளைஞர்கள் குழு வெளியிட்ட இதழ் இது. கல்லூரியில் படிக்கும் இளைஞர்களை ஒருங்கிணைத்துப் படைப்பாக்க நிகழ்விற்கு ஊக்குவித்து மனிதம் பற்றி சிந்திக்க வைத்த குழுவினரின் இதழியல் வெளிப்பாடு இது. போட்டிகள் நடத்தி மாணவர்களை வளர்த்துள்ளது. பொழுதுபோக்கு மேடை நாடகத்தை கருத்து விதைப்பு வீதி நாடகங்களாக மாற்றிய பங்கு இந்தச் சூழலுக்கு உண்டு. ஞான ராசசேகரனின் வயிறு, நா.முத்துசாமியின் நாற்காலிக்காரர் ஆகிய இரு நாடகங்கள் கோவை சங்கமம் குழுவினரின் முயற்சியால் நடைபெற்றதை அறியமுடிகிறது. கவிதை, கட்டுரை, துணுக்குச் செய்தி, சட்டக் குறிப்பு என இதழில் செய்திகள், படைப்பாக்கங்கள் உள்ளன. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |