பாட்டாளி தோழன். சனவரி 1982 இல் மரம் 1, கிளை 2 என்ற குறிப்புடன், டி.ஞானையா அவர்களால் சென்னையிலிருந்து பதிவு பெற்ற இதழாகத் தொடங்கித் தொடர்ந்து வெளிவந்து முற்போக்கு மாத இதழ். விலை 75 காசு. பல்சுவையாகப் பல்வேறு செய்திகளை இணைத்து வெளியிட்டுள்ளது. இந்திய சுதந்திரம் மறைக்கப்பட்ட வரலாறு எனத் தொடர் கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தொழிற்சங்கம் பற்றி எழுதியுள்ளார். கதை, கவிதை, கட்டுரை, துணுக்கு என உழைக்கும் மக்களது அவலங்களை, பிரச்சனைகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது. இந்த இதழில் வெளியான துணுக்குக் கதை இது...

குட்டிக் கதைகள்....

ஒரு சிங்கம் நரி கழுதை மூன்றும் காட்டிற்கு வேட்டையாடச் சென்றன. வேட்டையின் முடிவில் கிடைத்த இரையை மூவருக்கும் பங்கு போடுமாறு சிங்கம் கழுதையிடம் சொன்னது. அது ஒரு அப்பாவிக் கழுதை. இரையை மூன்று சமபங்குகளாகப் போட்டுவிட்டு சிங்கத்திடம் "பங்கிட்டுவிட்டேன் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றது. காட்டுராசாவிற்கும் வீணாய்போன கழுதைக்கும் சமபங்கா? அதெப்படி? என்று சொல்லி சிங்கம் கழுதையின் மீது பாய்ந்து அதனை அடித்துக் கொன்றது. பிறகு நரியிடம் "நீ இப்பொழுது பங்கு போடு" என்றது. நரி இரையில் மிகப் பெரும் பகுதியை ஒரு பங்காகவும் மிகச் சிறிய அளவை இன்னொரு பங்காகவும் போட்டு "எடுத்துக் கொள்ளுங்கள்" என்றது. "சபாஷ், நீ பிழைத்துக் கொள்வாய்" என்றது சிங்கம்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,