பரிதி. 1979 செப்டம்பரில் மக்கள் கலை இலக்கியப் போர்வாளாக சென்னையிலிருந்து வெளிவந்த இதழ். இந்த இதழ் 4 ஆவது இதழ். தேர்தல் வருகுது என்கிற தலையங்கத்தை மிகச் சிறப்பாக எழுதியுள்ளது. " நான்கைந்து நாய்கள் குரைப்பது போல கோரப் பல்லோடு போட்டுவிடலாம். இப்படி போட்டால் என்ன நாய்க்கு இந்த அரசியல்வாதிகளின் முகத்தைப் போட்டுவிடலாம். ஓ! நன்றாக இருக்கிறது. ஆனால் அழுத்தம் கிடைக்காது அவர்களுக்கு வெறும் பதவிகள் மீது மட்டும் மோகம் இருப்பது போல இருக்கும். இன்னொரு புது யோசனை. இன்னாது? நிறைய பேர்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் பாரத மக்கள்...அவர்களுக்கு பின்னால் சுவற்றில் அரசியல் போஸ்டர், சினிமா போஸ்டர், இருபதம்ச திட்டம், பசுமையைக் காப்போம், பாங்குகள் கடன் வசதி, கோயில் கும்பாபிசேகப் போஸ்டர். இப்படி இருக்கலாம்" ... கோட்டோவியமே வரையாமல், கோட்டோவியம் கண்ட நினைவை, மகிழ்வை படிப்பவர்கள் மனதில் ஏற்படுத்தும் படியாக எழுதியுள்ளது சிறப்பாக இருக்கிறது. கவிதைகள், கட்டுரைகள், குறிப்புகள் என சிந்தனையைத் தூண்டுகிற படைப்பாக்கங்களை இதழில் சிறப்பாக வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,