வாசகன். 1973 செப்டம்பரில் சென்னையிலிருந்து இளைஞர் அமைப்பின் சார்பாக வெளியிட்ட இதழ். மாலன் ஆசிரியராக இருந்துள்ளார். இது முதல் இதழ். மாலன், கல்யாண்ஜி, சுப்ரமணியராஜூ, சிந்துஜா, கெளரிசங்கர், தேவதேவன் ஆகியோர்களின் கூட்டமைப்பில் உருவானது. நவீன இலக்கியத் தேடல் என்பதன் பதிவாக இது உள்ளது. ஆங்கில இலக்கியத்தில் மிதந்து, தமிழிலக்கியத்தை செழுமைப்படுத்துகிறோம் என இயங்கியவர்கள் தங்களை நவீன இலக்கியவாதிகள் என அழைத்துக் கொண்டார்கள். இந்தக் கால கட்டத்தில் பல இதழ்கள் இப்படித் தோன்றின. மறைந்தன. இந்த இதழில் வெளியான மாலனின் கவிதை ஒன்று

தலைப்பு : ரூபங்கள்

ஆனை வந்தது முதலில்
அப்புறம் கலைந்து போனது
குதிரை முகத்தில் ஒருவன்
கொஞ்ச நேரம் போனான்
பானை வெடிச்சு மரமாச்சு
பாட்டன் புரண்டு மல்லாந்தான்
அலையாய் நுரைத்தது கொஞ்சம்
மணலாய் இறைந்தது கொஞ்சம்
கணத்தினில் மாறிடும் மேகம்
உனக்குள் எத்தனை ரூபம் !


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,