பூஞ்சோலை. 1971 களில் காரை இறையடியான், காரை அலீம் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்து காரைக்காலில் இருந்து வெளியிட்ட இதழ் இது. இந்த இதழ் மூன்றாவது ஆண்டின் ஆறாவது இதழ். காப்போம் தமிழ்ச் சோலை, கள்ளம் கயமை களைந்தெறிவோம், பூப்போம் அறமாய்ப் புரட்சித்தேன் பொங்கப் பொதுநலமாய், யாப்போம் தமிழ்ப்பாடல் யாண்டும் தமிழக உய்வினுக்கே, மூப்போம் தமிழின்பால் மூளும் பகைக்கோர் முடிவுகண்டே. என்ற பாடலைத் தலைப்பிலிட்டுத் தொடர்ந்துள்ளது. இந்த இதழின் ஆசிரியர் உரை - கள்ளுக்கடை திறப்பு அல்லது வள்ளுவத்தின் இறப்பு - என்பதாகும். 10-7-71 இல் காரைக்காலில் நடைபெற்ற உலகத்தமிழ்க் கழகத்தின் தொடக்க விழா பற்றிய குறிப்பை வெளியிட்டுள்ளது. பெருஞ்சித்திரனாரின் அறுபருவத் திருக்கூத்து தொடர் இதழில் தொடர்ந்துள்ளது. பாவாணருக்குப் பாடியளித்த வரவேற்புப் பத்திரமும் இதழில் உள்ளது. வெண்பாப்போட்டி நடத்தியுள்ளது. பாட்டரங்கம் எனப் பாடல் வெளியிட்டுள்ளது. மருத்துவர் கேசவசாமி எழுதியுள்ள மருத்துவத் தொடரையும் வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,