பைரன். 1970 களில் முத்திங்கள் ஏடாக வெளிவந்த இதழ். இதழ் ஆசிரியர் பி.எஸ்.பைரன். இந்த இதழின் ஆசிரியர் உரையில் சோசலிசம் என்ற சொல்லாடலின்வழி வதைக்கப்படும் மக்கள் நலத்தைச் சுட்டிக்காட்டி இந்திரா காந்தி அம்மையார் சிந்திக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். தந்தை பெரியாரின் கடவுள் பற்றிய உண்மைகள் இதழில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. சாதி ஆணவத்திற் கெதிராகக் கிளர்ந்து எழுந்து தன்மானப்போர் என்று எதிர்க்குரலை முன்வைக்கும் ஆசிரியரின் கட்டுரையும் இதழில் இடம் பெற்றுள்ளது. பகுத்தறிவோடு, அறிவு வளர்த்தும் இடமாகக் கல்விக்கூடங்கள் இருந்து வளர்த்தெடுக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட குரல்கள் எல்லாம் தனிமனித குரல்களாகச் சுருங்கிப்போய் விட்டன. அரசும் அதிகாரிகளும் இத்தன்மையை உள்வாங்கி, மக்களை நெறிப்படுத்தாது தன்னலத்தோடு இயங்கியதால் இன்று பொழுது போக்குகளோடு தன்னல மாந்தர்களாக தமிழ் மறந்தவர்களாக இனநலம் மறந்து கோழைகளாக மாறிப் போகிறார்கள். இது மாற கல்விக்கூடங்கள் தான் திட்டமிடவேண்டும்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,