நெப்போலியன். 1968 களில் சென்னையிலிருந்து ஆசிரியர் தியாகன் அவர்கள் வெளியிட்ட மாதம் இருமுறை இதழ். 30 காசு விலையில் 64 பக்கங்களில் இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழ் முதலாமாண்டின் நான்காவது இதழ். இதழில் நிறைய விளம்பரங்கள் பெற்று இதழைத் தொடர்ந்துள்ளது. ஒவ்வொரு இதழிலும் தியாகன் எழுதியுள்ள துப்பறியும் கதை இடம் பெற்றுள்ளது. இந்த இதழில் துப்பறியும் நடிகனும் துப்பாக்கி மர்மமும் என்ற கதை வெளியாகியுள்ளது. மோட்சப் பிரயாணம் என்ற துணுக்குகள் படிப்பவர்களுக்குச் சுவைகூட்டுவதாக இருக்கிறது. அட்டைப்படத்தில் உள்ளவர் செல்வி அ.மல்லிகா - அன்னை கலைக்குழுவினர் அளிக்கும் இரண்டாவது நாட்டிய நாடகம் யாழ்நங்கை 10-6-68 அன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் மயிலை பைன்ஆர்ட்ஸ் கிளப்பில் அரங்கேறுகிறது. இது வரலாறு அல்லவா ? ! ?


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,