மேகலை. 1967 களில் ஆசிரியர் இரத்தினா வெளியிட்ட இதழ். தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் அ.கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கலைஞர்.மு.கருணாநிதி அவர்கள் 10-6-67 இல் வெளியிட்டு வாழ்த்திய முதல் வெளியீடு. கி.ஆ.பெ.அவர்களின் வாழ்த்துரையோடு இதழ் தொடங்குகிறது. தமிழ்ப் பண்பாட்டை வளர்த்துதல், பெண் பெருமையை உலகுக்குணர்த்தல், இலக்கியத் தொண்டாற்றுதல் என்கிற இலக்கை முன் வைத்து இதழ் தொடங்கப்பட்டுள்ளது. சிறுகதை, முடியரசன் கவிதை, சட்டம், ப.முத்துராமலிங்கத்தின் குறிப்புகள், அறிவியல் பகுதி, பெண்கள் பகுதி என இணைத்துள்ள செய்திகளைக் காண முடிகிறது. தேவகோட்டையிலிருந்து அச்சாகி இதழ் வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,