கனிரசம். 1967 செப்டம்பரில் தொடங்கப்பட்ட இதழ் இது. இது முதல் இதழ். ஆசிரியர் மோத்திதாசன். கலை இலக்கிய மாத இதழ் என்று அறிவித்துள்ளது. 13.ஆன்டர்சன் தெரு, சென்னை 1 லிருந்து முகம்மது கெளஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. 48 பக்கங்களில் முதல் இதழ் வெளிவந்துள்ளது. முகம்மது கெளஸ் அழகின் சிறப்பு என்று இசுலாமியக் கருத்துகளில் காட்டப்பட்டுள்ள பெண் பற்றி எழுதியுளளார். அறிஞர் மதனீ சங்கம் வளர்த்த தங்க முஸ்லீம் என்று கவியரங்கத்தில் மரபுப்பாடல் எழுதியுள்ளார். மாலை நிலா, எங்கிருந்தோ வந்தாள், நிராசை என்கிற சிறுகதைகளும் உள்ளன. முதல் இதழ் ஈர்ப்புடன் உள்ளது. வெளிநாடுகளிலும் இதழுக்கான தொடர்பாளர்கள் இருந்ததை இதழ்வழி அறிய முடிகிறது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,