தமிழ்ப்பொழில். 1962 இல் வெளிவந்த 38 ஆவது ஆண்டு இரண்டாவது இதழ். தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தொடர்பு இதழ். ஆசிரியர் சுயம்பிரகாசம். தஞ்சாவூரிலிருந்து வெளிவந்த தமிழுணர்வுத் திங்களிதழ். தலைமை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தொண்டு, தமிழ், முன்னேற்றம் என்கிற கருத்துருக்களை இதழில் கொண்டு தொடர்ந்துள்ளது. இந்த இதழில் விஞ்ஞானமு தமிழும், குறிப்பு வினை, ஆரிய மொழிகளில் திராவிட மொழிகளின் இயல்பு, வள்ளுவர், திருவள்ளுவர் கொண்ட மொழியமைப்பு, அறிவன் கோயில், இலக்கியத்தில் அவலம், தமிழில் பாயிரம் - என்கிற கட்டுரைகள் உள்ளன. இதழில் வந்த கட்டுரைகள் சிறு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இதழின் ஆண்டுத் தொகுப்புகளும் கட்டமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. கரந்தைத் தமிழ்ச் சங்கத்திற்கு அளிக்கப்படும் நன்கொடைகள் 15 பி யின் படி வருமான வரிவிதிப்பிலிருந்து விலக்களிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,