அமுது. 1952 களில் சித்த வைத்திய, வாத, ஞான, ஆராய்ச்சி மாத இதழாக தின்னனூர், தாசர்புரத்திலிருந்து வெளிவந்த இதழ் இது. ஆசிரியர் தேவதாஸ், உதவி ஆசிரியர் கந்தசாமி ராஜூ. இந்த இதழ் தாசர்புரம் சித்த ஆராய்ச்சிக் கழகத்தினதும், மற்ற தென் இந்திய சித்த வைத்திய சங்கங்களின் ஆதரவு பெற்றது - எனத் தலைப்பிலிட்டுள்ளது. தமிழ்நாடு சித்த வைத்திய சங்கங்களின் கூட்டு மாநாட்டினை நடத்தியுள்ளது. சித்த மருத்துவத்தின் உன்னத நிலை பற்றிய கட்டுரையை இதழில் வெளியிட்டுள்ளது. சித்த வைத்திய சங்க நடவடிக்ககைகள் பற்றிய குறிப்பும் வெளியிட்டுள்ளது. சித்த வைத்திய ஆராய்ச்சி பற்றிய குறிப்பினைத் தனியாக வெளியிட்டுள்ளது. 16-7-1942 இல் தாசர்புரத்தில் சித்த வைத்தியக் கல்லூரி சென்னை மகாணத்திலேயே முதன் முதலாகத் தொடங்கப்பட்டுள்ளது என்ற செய்தியும், அந்த விழா நிகழ்வு பற்றிய குறிப்பும் இதழில் உள்ளது. இந்த இதழ் முதல் ஆண்டின் நான்காவது இதழ். தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |