தமிழ் முரசு. 1950 களில் சென்னையிலிருந்து பதிவுபெற்ற இதழாக ம.பொ.சி வெளியிட்ட இதழ் இது. 56 பக்கங்களில் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது. இது நான்காம் ஆண்டின் ஆறாவது இதழ். வெற்றி எட்டுத் திக்கும் எட்டக் கொட்டு முரசே, வீரர் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே என்று கொட்டுகிற முரசு படத்தினையும், வில், புலி, மீன் படத்தினை உடைய கொடியினையும் இதழின் தலைப்பில் கொண்டுள்ளது. இதழ் வழி தமிழ் அரசு இயக்க வாரப் பதிப்பான செங்கோல் (ஆ.கொ.வேங்கடராமானுசம்) இதழ் தொடங்குவது பற்றிய குறிப்பையும் அறிய முடிகிறது. மலை மறைந்தது என்று மறைமலையடிகள் மறைந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்பன் பற்றிய குறிப்புகளை வெளியிட்டு, எவ்வாறு தமிழ் மன்னன் கொள்ளைக் காரனென்றும், கொலைகாரனென்றும் பழித்துக் கூறப்படுகிறது என்பதை விளக்கியுள்ளார். திருபத்தூர் தமிழரசுக் கழக மாநாட்டு வரவேற்புக் குழுவினரின் படத்தினை வெளியிட்டுள்ளது. தமிழரசு பெற்றே தீருவோம் என்ற ம.பொ.சி. அவர்களின் கட்டுரை இதழில் இடம் பெற்றுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் பற்றிய செய்தியும் இடம்பெற்றுள்ளது. தமிழரசுக் கழகம் பற்றிய செய்திக் குறிப்புகளும் இதழில் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,