முன்னணி இதழ். 1949 களில் வெளிவந்த முற்போக்கு அரசியல் இலக்கிய வாரப் பத்திரிகை. விலை இரண்டணா. இது முதலாம் ஆண்டின் 29 ஆவது இதழ். சென்னை 14 லிருந்து இந்த இதழ் வெளிவந்துள்ளது. பர்மிய மக்களின் விடுதலை இயக்கத்திற்கு நேருவின் துரோகம் என்ற கட்டுரை கிளர்ந்து எழுந்த ஏழை பர்மிய மக்களுக்கான ஆதரவுக் குரலாகவே உள்ளது. பர்மியர்களின் முதுகில் குத்துவதைத் தடுப்பது இந்தியர்களின் கடமை என்று துணிந்து எழுதியுள்ளது. டாலர் நாகரிகம் பற்றி விளக்கமாக எழுதியுள்ளது. தலையங்கக் கட்டுரையில் தேர்தல் நாடகம் பற்றி எடுத்துக் காட்டுகளுடன் விளக்கியுள்ளது. அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் 23 ஆவது மகாநாடு மே மாதம் 27 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி முடிய பம்பாய் நகரத்தின் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. வந்த கடிதங்களை வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. எட்டுத் திசையிலும் என்று உலகம் முழுவதும் முதலாளிகள் எப்படி வேட்டையாடுகிறார்கள் என்று விளக்கியுள்ளது. மதுரை சென்டரல் ஜெயிலில் 15 நாள்கள் என ஜெயில் அனுபவம் பற்றி எழுதியுள்ளது சுவையானதே. பலகணி என சூழலியல் நெருக்குதல்க்ளை விளக்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும்16 பக்கங்களில் இதழ் வெளியிட்டுள்ளது வாழ்த்துதற்குரியதே தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |