1949 மே திங்களில் கனவு 1 கற்பனை 4 எனக் குறிப்பிட்டு வெளியான நான்காவது இதழ் இது. எஸ்.சோமசுந்தரம் ஆசிரியராக இருந்து ஒப்பணக்காரத்தெரு கோவையிலிருந்து வெளிவந்துளளது. இதழின் விலை 4 அணா. கோவையின் வணிகர்களிடம் விளம்பரம் பெற்று இதழை நடத்தியுள்ளது. பங்கஜா மில்ஸ் சுவர்ண மாளிகை சாராதா மில்ஸ் என கோவையின் விளம்பரங்கள் காணப்படுகின்றன. இதழின் அட்டை வண்ணப்படமாக உள்ளது. நவீன வசுவாமித்திரர், தமிழர எழுந்திரு, வெகுஜன விரோதி, கவிக்குயில் மறைவு, விதண்டாவாதம், மலடி, சுவைத்துச் சிரியுங்கள்,வாழ்க்கையில் வெற்றிபெற, வள்ளுவர் தந்த காம இன்பம், மணிமேகலை (அட்டைப்பட விளக்கம்) விபசாரியா? குறுக்கெழுத்துப் புதிர், மாய மந்திரக்கோல், பழியாருக்கு?, ஆயிரம் தலைவாங்கியவன், பொய்யுகம் - என ஒவ்வொரு படைப்புகளும் ஈர்ப்புடையதாக இருந்து படிப்பவர்களை ஈர்த்துள்ளது. நிறைய நகைச்சுவைகளும் காணப்படுகின்றன. தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061, |