தமிழ் மருத்துவப் பொழில். 1941 களில் தமிழ் சித்த மருத்துவச் செய்திகளை உள்ளடக்கியதாக மாங்காடு. வடிவேறு முதலியார் ஆசிரியராக இருந்து வெளியிட்டு திங்களிதழ். சென்னையிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த இதழ் முதலாமாண்டின் ஏழாவது இதழ். பிள்ளைப் பேறு பற்றிய குறிப்புகளும் இதழில் உள்ளன. கஸ்தூரி எப்படி மருந்தாகப் பயன்படுகிறது என்பதற்கான விளக்கமும் தரப்பட்டுள்ளது. பொருட் பண்பு வெண்பா என இலவு, துளசி, பனை, முல்லை, பிரம்பு என பல பொருள்களின் குணம் பயன் படுத்தும் முறை போன்றவற்றை வெண்பா வடிவில் வெளியிட்டுள்ளது.

வேம்பட்டைக் குடிநீர்

தொந்தித் தகலாத தோட சுரமகன்று
சிந்தைக் கனுகூலஞ் சேரவென்றால் - வந்தித்துத்
தாபச் சுரமுமறச் சஞ்சலமி லாதருந்து
நீபப் புறணிகுடி நீர்.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,