தமிழரசு : மலர் 4 இதழ் 9 தமிழரசு இதழ். 1933 செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி வெளிவந்துள்ளது. ஒரு செந்தமிழ் மாத வெளியீடு என்று அறிவித்து, "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன் றறியேன்" - எனத் தலைப்பிலிட்டு, ஆசிரியர் டாக்டர். மே. மாசிலாமணி முதலியார் அவர்களால் சென்னையிலிருந்து வெளியிட்ட இதழ் இது. இராமலிங்க சுவாமிகள் கருத்தை முதன்மைப்படுத்தி, சிறுவர் விருந்து, விகடம், நாடகம், என மக்களை ஈர்க்கிற வகையில் வெளியிட்டுள்ளது. நாரண துரைக்கண்ணன் எழுதிய மகளிரைப் பழிப்பது தகுதியா என்ற கட்டுரை அருமை. முன்னும் பின்னும் நிறைய விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,