செந்தமிழ்ச் செல்வி - இதழ் வெளிவந்த ஆண்டு - 1924

ஈரோடு திருமிகு திருவேங்கடம் பிள்ளை அவர்களது நூலகத்திலிருந்து பெற்ற இதழ் இது.

திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடாக திங்கள்தோறும் வெளிவந்த செந்தமிழ்ச் செல்வி இதழ்களின் இரண்டாஞ்சிலம்பு தொகுதியிது. இதழாசிரியக் கூட்டத் தலைவர் - கா.சுப்பிரமணியபிள்ளை - தொகுதி இரண்டு - 1924 - 1925 - செந்தமிழ்ச் செல்வி இதழாசிரியர் கூட்டத்து உறுப்பினர்களாக இதழில் காணப்படுவது. தலைவர் கா. சுப்பிரமணிய பிள்ளை, 2) எசு. சச்சிதானந்தம் பிள்ளையவர்கள் பாடசாலை டிப்டி இன்ஸ்பெக்டர், சைதாப்பேட்டை பிரிவு, 3) ந.மு. வேங்கடசாமி நாட்டார், தலைமைத் தமிழாசிரியர், கீபர் கலாசாலை, திருச்சி, 4) துடிசைக் கிழார், போலீஸ் சர்கிள் இன்ஸ்பெக்டர், பல்மனெரி, 5) வித்துவான் மு,கதிரேச செட்டியாரவர்கள், மகிபாலன் பட்டி,

இத்தொகுப்பின் உள்ளுறையாக இருப்பது ந.மு.வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள தமிழ்ப் புலவர் வரலாறு (அகத்தியர்) முதல், வேலூர் க.ப.சந்தோசம் எழுதயுள்ள வெறுஞ்சிறுமொழி வரை - படைப்பாக்கங்கள் உள்ளன. இதழில் புகைப் படங்களும் உள்ளன.


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,