பிரான்ஸிலிருந்து வெளிவரும் இதழ் இது. முத்திங்களிதழ். ஆசிரியர் கோவிந்தசாமி செயராமன், சிறப்பாசிரியர் கி.பாரதிதாசன். மின் அஞ்சல் tamizhvani@free.fr இதழின் பெரும்பாலான படைப்பாக்கங்கள் தமிழகத்துப் படைப்பாளிகளிடமிருந்து பெற்றவையாக உள்ளன. சிறப்பாசிரியரின் படைப்புகள் காணப்படுகின்றன. திருக்குறள் குறிப்பும் இதழில் உள்ளது. அலன் ஆனந்தன் இடப்பெயர்வு பற்றிய சிறப்பான குறிப்பினை இந்த இதழில் தந்துள்ளார். வெளிநாட்டில் இருந்த போதும், தனக்குக் கிடைத்த தமிழியச் செய்திகளைத் தட்டச்சு செய்து, இதழாக்கிப் படியெடுதது சுற்றுக்கு விடுவது என்பது வாழ்த்துதற்குரியதே. தொடரட்டும் இவரது பணி.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,