South West London Tamil Education Centre. London SW 17 - தனது 2006 கலைவிழா மலரை அனுப்பியுள்ளது. தென்மேற்கு இலண்டன் தமிழ் கல்விக்கூடம் இம்மலரை 64 பக்கங்களில் மிகத் தரமாக உருவாக்கியுள்ளது. புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகிற தமிழர்களின் உயிர்த்துடிப்பும், இணைப்புத் தொடரும் தமிழ் மொழிதான். அதனை வரும் தலைமுறையினருக்குக் கற்றுத் தருவதும், கற்றுக் கொள்ளும் மாணவர்களது படைப்பாக்கங்கள், ஆளுமைகள், ஆற்றல்கள், செயற்பாடுகள் - என்பனவற்றை பதிவு செய்து அவர்களை ஊக்குவிப்பதும் உயரிய செயல். தமிழ் மொழியின் கலை, பண்பாடு ஆகியவற்றின் கூறுகளை உள்ளடக்கி கலைவிழா என வெளிப்படுத்தி மகிழ்வது இளம் தலைமுறையினரை வளர்த்தெடுக்கும். தென்மேற்கு இலண்டன், ஹவுன்ஸ்லோ, மில்டன் கீன்ஸ்,கேய்ஸ், ஸ்ரீவனேச், குறோலி - என்கிற பகுதிகளில் நடைபெறுகிற தமிழ்க் கல்விக் கூடங்களையும் ஒருங்கிணைத்து மாணவர்களை வளர்த்தெடுப்பது நிறைவாக உள்ளது. உலகம் முழுவதும் வாழுகிற தமிழ்ப் பள்ளிகளின் படைப்பாக்கங்கள், பதிவுகள் ஆகியவற்றை தமிழம் வலைக்கு அனுப்பி வைத்தால் அதனைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கும் அறிமுகப்படுத்தத் தமிழம் வலை விரும்புகிறது.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,