ஜெர்மெனியிலிருந்து விக்னா பாக்கியநாதன் அவர்கள் வெளியிடுகிற கவிதை முத்திங்களிதழ். www.kalaivilakku.com என்கிற இணையதளத்தின் வழியாக இதழ் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல், அச்சு இதழாகவும் இந்த இதழ் வெளியிடப்படுகிறது. ஆசிரியரே கவிஞர். எனவே கவிதைத் தேர்வும் பதிவும் சிறப்பாக இருக்கிறது. உலக அளவில் அனைத்துக் கவிஞர்களையும் இணைத்துக் கருத்துச் செறிவோடு இதழை வெளியிடுவது வாழ்த்துதற்குரியது. இந்த இதழல் வெளியான காந்தள் மலர் பற்றி கவிதை இது.


உனக்கும் நீடு புகழே


வீட்டுக் கொல்லையிலே பாதையோரங்களிலே
காட்டுப் பகுதியிலே பற்றைச் செடிகள்தனிலே
நீட்டிய இலையுடன் தலைகாட்டும் காந்தட்பூவே !
போட்டியின்றிப் புனிதமானாய் மாவீர வித்துக்களாலே

மண்ணுள்ளே உயிர்ப்புடன் பொறுமை காத்து
மண்ணுடைத்து மலர்வாய் கார்த்திகை தோறும்
கண்ணைப் பறிக்கும் எழிலோடு பச்சை மஞ்சளாக
என்னை ! செம்மஞ்சள் சிவப்பாக மாறும் வித்தகியோ?

கார்காலத்திலே முகிழ்க்கும் காந்தள் மலலே ! - உயர்
கைங்கரியம் பெற்றாய்! உன்னவதார நாளாலே
போர்வரன் முறையிலே தேசியச் சின்னங்களிலே - நீ
பேர் பெற்றுயர்ந்தாய்! தமிழீழத் தேசியப் பூவெனவே!

தெய்வங்களுக்குச் சூடாமலர்ப் பட்டியலிலிருந்த நீ - மாவீர
தெய்வங்களோடு பூசிக்கப்படும் பேறு பெற்றாயின்று
காயமொடு உயிரர்ப்பணித்து விடுதலை வேட்கையுடன் - நம்
துயில்கொள்ளும் மாவீரராலே மகோன்னதம் உனக்கே.

பன்னீராண்டுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சியைவிட
ஆண்டொன்றுக்கு வரும் ஆயுளுடைய தேசியப்பூவே!
மாண்டும் எம்மண்ணில் கல்லறைக்குட் துயில்கின்ற
ஆண்டகைகள் தினத்தில் உனக்கும் நீடுபுகழ்

சங்க இலக்கியத்தில் காந்தட்கைகள் என வர்ணித்தே
மங்கையரின் கைவிரலுக்கு ஒப்பான மலரே !
இங்கே எம்காலத்திலே வெட்சிமலருக்கு ஈடாக
மங்கலமாய் வீரம்புகழ் மலராகப் பேறுபெற்றனையே!

தாயகம் இந்தியா சீனா தாய்லாந்து மலாக்கா - என
தாயகம்பல உனக்குண்டே காந்தட் கொடிப் பூவே !

- ஒளவைபாங்கி -




கலை விளக்கு : ஜெர்மெனியிலிருந்து வியன்னா பாக்கியநாதன் அவர்கள் வெளியிட்டுள்ள உலகக் கவிஞர்களை ஒன்றிணைக்க விரும்புகிற கவிதை இதழ். ஜெர்மெனி, நெதர்லேந்து, தமிழீழம், லண்டன், டென்மார்க், இந்தியா எனப் பல நாடுகளின் படைப்பாளிகள் இதழில் பங்கேற்றுள்ளனர்.



கவிதைகளுக்காக விக்னா பாக்கியநாதன் அவர்கள் ஜெர்மெனியிலிருந்து வெளியிட்டு வருகிற இதழ் இது. S.Packiyanathan. Droote 19. 44328 Dortmnd. Germany



ஜெர்மெனியிலிருந்து வருகிற கலைவிளக்கு. விக்னா பாக்கியநாதன் அசிரியராக இருந்து வெளியிடுவது. இதழ் முழுவதும் கவிதைகள் உடையது. கவிஞர்களை ஒன்றிணைக்கும் இதழ் என்று அறிவித்துள்ளது. அய்கூ, உரைவீச்சு, மரபு என அனைத்து வகைக் கவிதைகளையும் வெளியிட்டு வருகிறது


தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,