சிந்தனையாளன் இதழ் தமிழில் கருத்துவிதைப்பு செய்து வருவது வரலாறு. வே.ஆனைமுத்து அவர்களது கூர்த்த மதியை இந்த இதழ் வழி அறிய முடியும். அவரது ஆங்கிலவழிக் கருத்து விதைப்பு இதழே இந்த PERIYAR ERA இதழ். திங்களிதழ். சென்னை, சேப்பாக்கத்திலிருந்து வெளிவருவது. படத்திலுள்ளது 12 ஆவது ஆண்டின் 4 ஆவது இதழ். உண்மையை உலகறியச் செய்யவேண்டும் என்பது முதன்மையானது. உலகம் முழுவதற்குமான தொடர்பு மொழி இன்றைய சூழலில் ஆங்கிலம் என்பதால் அதற்கொப்ப கருத்து விதைப்பை ஆங்கிலத்தில் நுட்பமாக வெளியிடுவது வணங்குதற்குரியதே. உலகளாவிய பார்வையை, அழுத்தத்தைக் கொண்டுவர இச் செயல் வழிவகுக்கும். நம்தமிழர்கள் மாற்று மொழிப் புலமை பெற்று மொழியை ஆண்டு, கருத்து விதைப்பது உயர்வானதே.



தொடர்புக்கு : pollachinasan@gmail.com - 9788552061,